பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

2. திருமூலர் வாழ்க்கை வரலாறு

திருமூலர் நந்தியம் பெருமான் திருவருள் பெற்ற நான்கு மறைகளை அறிந்த யோகியருள் ஒருவர். இவர் அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய எண்வகைச் சித்திகளையும் கைவரப் பெற்றவர். (இவற்றின் விளக்கத்தை நூல்விளக்கத்தில் காண்க) இவர் பொதிகை மலையில் உள்ள அகத்திய முனிவரு டன் சின்னுள் தங்குதற்குக் கயிலையினின்றும் புறப்பட்டனர்.

இங்ங்ணம் புறப்பட்ட திருமூலர், வரும் வழியில் திருக் கேதாரம் வழிபட்டு வணங்கி, நேபாள தலத்தையும் பணிந்து, கங்கைக்கரை வழியே வந்து, அக்கங்கையில் நீராடிப் பின் காசிப்பதியை வந்தித்து வணங்கி, பூரீசைலத்தையும் போற்றிப் புகழ்ந்து, திருக்காளத்தித் திருமலையை வந்து அண்மிஞர். அங்கு அத்தலப் பெருமானப் பணிந்து, அதன்பின் திருவாலங் காட்டை அடைந்து, அதனையும் வணங்கிக் காஞ்சியம்பதியை உற்று, அங்குச் சிலநாள் தங்கி ஏகாம்பரநாதனப் பணிந்து வரும் நாட்களில், அங்கு இருந்த யோக முனிவர்களோடு அளவளாவித் திருவதிகை வீரட்டானத்தை அடைந்தனர்.

அங்கிருந்து சிதம்பரம் வந்து சேர்ந்தனர். தில்லையம்பதி யில் திருக் கூத்தாடும் கூத்தப் பெருமானரது குஞ்சித பாதத்தைப் போற்றிப் பணிந்து, அத்தலத்தைவிட்டுப் பிரிய மனம் இன்றி அங்குத் தங்கி இருந்தார். என்ருலும், பொதிகை மலையை அடைய வேண்டுமென்ற குறிக்கோளினல் அத் தலத்தை அரிதின் நீங்கிக் காவிரியாற்றின் கரையினை அண்மிஞர்; அண்மியவர் அவ்வாற்றில் நீராடினர்; பின் திருவாவடுதுறையை அடைந்தனர். இத் தலத்தை அடைந்த திருமூலர், திருத்தலத்தை வலங்கொண்டு, அத்தலத்துப் பெருமாளுர்மீது விருப்பம் மிகக் கொண்டனர்,