பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

23{}

(விளக்கம்) பாதங்களைப் பூமியில் ஊன்றுதல் வேண்டும். முழங்காலில் கைகளை நீட்டுதல் வேண்டும். வாயைத் திறந் திருக்க வேண்டும். கண்களை மூக்கு நுனியில் வைக்க வேண்டும். இப்படி அமைப்பதுவே சிம்மாசனம் ஆகும். பீஜத்தின் கீழ் நரம்பு இரண்டிடத்தும் கால் பரட்டை ஊன்றி உட்கார்ந்து, முழங்கையை முழங்காலில் வைத்து விரல்களை விரித்து நாசி யைப் பார்த்தாலும் சிம்மாசனம் ஆகும். இதனை அரிமா இருக்கை என அழகிய தமிழில் அறையலாம்.

ஆசனம் பல என அறிவித்தல்

173. பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி

சொத்திரம் வீரம் சுகாதனம் ஓர்ஏழும் உத்தம மாம்முது ஆசனம் எட்டெட்டுப் பத்தொடு நூறு பல ஆ சனமே.

(இ-ள்) பத்திரஆசனம், கோமுகாசனம், பங்கயாசனம், சிங்காசனம், சொத்திராசனம், வீராசனம் ஆகிய ஏழ் ஆசனமும் முன்சொன்ன பழமையான ஆசனமாகிய சுவத்தி கத்தைச் சேர்க்க எட்டாகும். இவை உத்தம ஆசனங்க ளாகும். எட்டு ஆசனமே அன்றி நூற்று இருபத்தாறு ஆசனங்களும் உண்டு.

(அ சொ) கோ - பசு, கேசரி . சிங்கம்.

(விலக்கம்) பத்திராசனம், பங்கயாசனம், சிங்காசனம் முன்பே விளக்கப்பட்டன. முது ஆசனம் ஈண்டுச் சுவத்தி காசனம் ஆகும். இதுவும் முன்னர் விளக்கப்பட்டது. கோமு காசனம் என்பது பசுவின் முகம்போல அமைவது. இடப்பின் பாகத்தில் வலப்பரட்டையும், வலப்பின்பாகத்தில் இடப் பரட்டையும் மாறிச் சேர்த்து இருத்தல். ‘பரடாவது கணக் கால். சொத்திரம் இன்னது என்பது அறிய முடியவில்லை. யோகியர்பால் அறியவும். சொத்திகம் சொத்திரம் என்று கொள்ளினும் அமையும்,