பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

ఃకి

(இ) - ள்) மனமாகிய ஆரியன் நல்லவன்: பெரியவன்; பூசிக்கத் தக்கவன். அவனுக்கு இரண்டு குதிரைகள் உள்ளன. அக் குதிரைகளை வீசிப்பிடிக்கும் உபாயத்தை யாரும் அறிந்திலர். ஆனல் கூர்மையான ஞானசிரியனது திருவருளால் அறியும் உபாயத்தைப் பெற்ருல், அக்குதிரை களேச் சேர்த்துப் பிடித்துவிடப் பின் வசப்படும்.

(அ - சொ) ஆரியன் - பெரியோன். பூசிக்கத்தக்கவன் . கொண்டாடத்தக்கவன். விரகு - உபாயம். கூரிய - நுண்ணறி வுடைய.

(விளக்கம்) ஆரியன் ஆவான் ஈண்டுமனம் ஆகும். இரண்டு என்பவை பிங்கலே இடகலை என்னும் வாயுக்களாம். மூக்கின் துவார வழியே வந்து போகும் வாயுக்களே இங்கு இரண்டு குதிரைகளாகக் கூறப்பட்டுள்ளன. வீசிப்பிடித்தலாவது வெளியே வீசிப் பின் உள்ளுக்கு இழுத்துப் பிடித்தலாம். வீசுதலை இரேசகம் என்பர். இழுத்தலைப் பூரகம் என்பர். நிறுத்தலைக் கும்பகம் என்பர். எத்தனை மாத்திரை வெளி விடுதல், இழுத்தல், நிறுத்தல் என்பனவற்றைக் குருவின் அருளால்தான் உணர்தல் வேண்டும். அதன்பின் நம் இஷ்டப் படி இடகலை, பிங்கலைகளை அடக்கி ஆளலாம்.

பிராணுயாமப் பயன் இன்னது எனல்

176. புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால் கள்ளுண்ண வேண்டா தானே களிதரும் துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும் உள்ளது சொன்ளுேம் உணர்வுடை யோருக்கே. (இ - ள்) பறவையை விட மிக்க வேகமுடையது பிராணவாயு வாம்.குதிரை. அத்தகைய குதிரைமீது ஏறினல் கள் குடிக்க வேண்டா களிப்பு உண்டாக்கும். அதுவே பெருமிதத்துடன் துள்ளி நடக்கச் செய்யும், சோம்பலை நீக்கும். இந்த உண்மையினை உணரும் உணர்வுடையவர்க்கு இதை எடுத்துக் கூறிைேம்.