பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233

2緩隊

(அ சொ) புள் - பறவை. புரவி . குதிரை மேற் கொண்டால் - அடக்கினல். சோம்பு - சோம்பல்.

(விளக்கம்) புரவி ஈண்டுப் பிராணவாயு. மேற்

கொள்ளுதல், குருவின் உபதேசப்படி அடக்கி நடத்துதல்.

இவ்வாறு முறைப்படி நடத்தினுல் இன்பம்தானகத் தன்னிடத் திலேயே பிறக்கும். ஆகவே புறத்தே சென்று கள் குடிக்க வேண்டா எனப்பட்டது. . --"

பிராணுயாமப் பயிற்சியின் கால அளவு கூறல் ४ ५४ ९

177. ஏறுதல் பூரகம் ஈர்எட்டு வாமத்தால்

ஆறுதல் கும்பகம் அறுபத்து கால்அதில் ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம் மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே,

(இ - ள்) பதினறு மாத்திரை அளவு இடகலையால் மூச்சை மெல்ல உள்ளுக்கு இழுத்தல் பூரகமாகும். அறு பத்து நான்கு மாத்திரை காலம் உள்ளேயே தடுத்து வைத்தல் கும்பமாகும். முப்பத்திரண்டு மாத்திரை அளவில் மெல்ல வெளிப்படுத்தல் ரேசகமாகும். இடகலையால் இழுத்துப் பிங்கலேயால் விடுதல் வஞ்சகம் ஆகும்.

(அ - சொ) ஈர்எட்டு - பதிறுை. வாமம் - இடகலை, ஆறுதல் - நிறுத்தல். ஊறுதல் - வெளியிடல்.

(விளக்கம்) இடப்பக்க நாசிவழி வந்துபோகும் காற்று இடகலை என்றும், வலப்பக்க நாசியின் வழியே வந்து செல்லும் காற்று பிங்கலை என்றும் கூறப்படும். உள்ளுக் கிழுத்தலைப் பூரகம் என்பர். வெளியிடுதலை ரேசகம் என்பர். நிறுத்தலை கும்பகம் என்பர். சிவ என்ற மகாமந்திரத்தை ஓர் அளவு கோலாகக் கொண்டு உள்ளத்தில் உச்சரித்தால், இரண்டு மாத்திரை ஆகும். இவ்வாறு கணக்கிட்டு மேலே கூறிக: