பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

శ్రీజ్లో

மாத்திரைகளின் அளவைக் குறித்துக் கொள்ள வேண்டும். கண் இமைக்கும் நேரமும், கை நொடிக்கும் நேரமும் ஒரு மாத்திரைக்கு அளவாகும். ஊறுதலாவது இழுத்த வழியே விடாமல், மாறி விடுதல் என்பதாகும். இதுவே வஞ்சகம் என்று கூறப்பட்டது. -

கால முறைப்படி பிராணயாமம் செய்வதன் பயன்

178. வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்

பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் தெளியக் குருவின் திருவருள் பெற்ருல் வளியி னும்வேட்டு அளியனும் ஆமே.

(இ - ள்) இடகலை வழிவரும் காற்றினை இழுத்து நம் வசத்தில் அடக்கிவந்தால், உடல் பளிங்குபோல் ஒளிவிட்டு விளங்கும். உடல் முதுமையுறினும் இளமையுடன் திகழும் இவற்றின் தன்மைகளை நன்கு தெரிந்துகொள்ளக் குருவின் திருவருளை மாணவன் பெற்றுவிட்டால் காற்றைக்காட்டி லும் விரும்பி மிக மெல்லியன் ஆவன்.

(அ - சொ) வளி - காற்று. காயம் - உடம்பு. பழுக்

கினும் - முதுமையுற்ருலும். பிஞ்சு - இளமை. வேட்டு - விரும்பி. அளியன் - மென்மையன். ـ۔‘‘ ::

(விளக்கம்) யோகியர் முதுமையுற்ருலும் இளமைத் தன்மையில் இருந்ததற்கு இவ்வளிப் பயிற்சியே காரணம். பிராணயாமத்தார் முதுமையை ஒழித்து இளமை பெறலாம் என்பது இதன்கண் ஒதப்பட்டுள்ளது. ஆனால், குருவின் திருவருள் தேவை என்பது இதன்கண் நன்கு எடுத்து இயம்பப்பட்டுன்ளது. செய்யச் செய்ய உடல் மென்மைத் தன்மை அடையும். அதல்ை ஆகாயத்திலும் பறக்கும் சித்தி ஏற்படும். இதுவே கடைசி அடி கூறும் கருத்தாகும்,