பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

盛岛莎

கணக்கை அறிவார் இல்லையே. இதனை அறிந்தால் இயமன உதைக்கும் குறியையும் பெறலாமே.

(அ - சொ) ஏற்றி - இழுத்து. இறக்கி - விட்டு. பிடிக்கும் - பிடித்து நிறுத்தும். காற்று - பிராணவாயு. கூற்று - இயமன். குறி - குறிப்பு: (வன்மை)

(விளக்கம்) மாத்திரை அளவு அறிந்து ரேசக பூரக கும்பங்களைச் செய்ய வேண்டுதலின் கணக்கறிவார் என்றனர். பிராணயாமம் செய்பவர், நீண்ட ஆயுளைப்பெறுவர் ஆதலின். கூற்றை யுதைக்கும் வல்லமை பெறுவர் எனப்பட்டது.

பிராணுயாமம் செய்பவரிடம் பெருமான் பிரகாசிப்பான்

181. புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை

நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில் உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும் புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

(இ - ள்) வெளிவந்தும் உள்ளே சென்றும் சிரிகின்ற வாயுவை முறைப்படி உள்ளே தூய்மை யுடையதாகச் செய்தால், உறுப்புக்கள் எல்லாம் சிவக்கும்; உரோமமும் மிகவும் கறுமையாக இருக்கும்; சுருண்ட சடையுடைய இறைவன் உள்ளத்தை விட்டு நீங்காது விளங்குவன்.

(அ - சொ) புறப்பட்டு - வெளிவந்து, புக் கு - உள் சென்று. நெறி - முறைமை. நி ன் ம ல ம் - பரிசுத்தம். உரோமம் - மயிர். புரி - சுருண்ட.

(விளக்கம்) பிராணயாமம் செய்யச்செய்ய நரைதிரை உண்டாகா. உடல் உறுப்புகள் செந்நீர் ஓட்டம் மிக்குச் சிவந்து காணப்படும். இறைவன் உள்ளத்தில் குடிகொண்டு அவ்விடம் விட்டு நீங்காதவனகி விளங்குவன்.