பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237

காலத்தை வெல்லும் கருத்தினை உணர்த்தல்

132. மூலத் துவாரத்தை முக்காரம் விட்டிரு

மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு வேலொத்த கண்ணே வெளியில் விழித்திரு காலத்தை வெல்லும் கருத்திது தானே.

(இ - ள்) நிமிர்ந்து உட்கார்ந்து மூலாதாரத்தை மூச்சு அடக்கிக்கொண்டு இரு உச்சித் அளேயாகிய பிரம்மாந்திரத் தின்மேல் மனத்தை வைத்திரு. வேல் போல்கூரிய கண்ணப் புறத்தே செலுத்தாது, அகநாட்டத்தில் வைத்து விழித்திரு. இதுவே காலத்தை வெல்லும் கருத்தாகும்.

(அ - சொ) மூலத்துவாரம் மூலாதாரம். முக்கார மிட்டிரு - மூச்சை அடக்கி அழுத்தி இரு. மேலைத்துவாரம்உச்சித்துளை; இதுவே பிரம்மாந்திரம் எனப்படும்.

(விளக்கம்) காலம் என்றது. இத்துணை காலம் ஆயுள் எனக் குறிப்பிட்ட காலம். இதனை மேலே கூறிய முறையில் பயிற்சி செய்தால், குறிப்பிட்ட காலஎல்லேயைக் கடக்க லாம் என்பதாம். இந்த மந்திரத்தை உட்கொண்டே வள்ளலாரும் பசித்திரு, விழித்திரு, தனித்திரு' என்றனர்.

ஊழிக்காலம் வரை இருக்கும் உபாயம்

183. கடைவா சலைக்கட்டிக் காலே எழுப்பி

இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி மடைவாயில் கொக்குப்போல் வந்தித் திருப்பார் உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே. (இ - ள்) மூலாதாரத்தை அடைத்து, பிரான வாயுவால் அங்குள்ள குண்டலி சத்தியை எழுப்பி, நடுவழி யாகிய சுழுமுனையால் தாரண செய்து நீர் ஓடும் மடை