பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239

239

தியானம் செய்பவர் சிவன் ஆகலாம்

135. காட்டம் இரண்டும் கடுமூக்கில் வைத்திடில்

வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை ஓட்டமும் இல்லை உணர்வில்லை தான்இல்லை தேட்டமும் இல்லை சிவன் அவன் ஆமே.

(இ - ள்) கண்கள் இரண்டையும் மூக்கின் நுனியில் வைத்தால் வாட்டம் இல்லை; உடலுக்கு அழிவும் இல்லை. பிராணனும் இயங்காது; உலக உணர்வும் இல்லாமல் போகும். நான் என்னும் அகங்காரமும் ஆணவமும் அடங் கும் ஆராய்வு எதுவும் ஏற்படாது; சிவகை விளங்கலாம்.

(அ - சொ) நாட்டம் - கண். மனை - உடல். தேட்டம் - ஆய்வு.

(விளக்கம்) தியான நிலையில் இரண்டு கண்களையும் புருவ மத்தியில் வைத்துத் தியானம் செய்ய வேண்டும் என்பதை இம் மந்திரம் அறிவிக்கிறது. இதனால் உடம்பினை நீண்ட நாளைக்கு வைத்திருக்கலாம் என்பதும், சிவனுக விளங்கலாம் என்பதும் கூறப்பட்டன.

பிராளுயாம தியானம் மரணபயம் தவிர்க்கும்

186. நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டு

உயர்விழா வாயுவை உள்ளே அடக்கித் துயரரு நாடியே தூங்கவல் லார்க்குப் பயனிது காயம் பயம்இல்ல்ை தானே (இ - ள்) இரண்டு கண்களையும் மூக்கு நுனியில் வைத்து, உயர்த்தலினின்றும் தாழாத பிராணனை உள்ளே "நிறுத்தித் தொடக்கு நீங்காத நாடியில் அசையாது நிலைத்து இருப்பவர்கட்குச் சரீரம் அழியுமே என்ற பயம் கிடையாது; இதுவே தியானப் பயனும், -- .*:- - - -