பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

: 42.

(இ - ள்) மலர்கள் விரும்பி ஏறும் சுருண்ட சடை யுடைய இறைவனது திருவடிகளில் எந்தவகையான விருப்பத்துடனேசேரினும், தேவர்கள் வாழும் இடத்திற்கு சென்று அங்குள்ள போகம் துய்ப்பர். உமாதேவி விரும்பிக் களிக்கும் வண்ணம் ஆனந்தக் கூத்தாடுபவனும் திருமாலாம் எருதில் ஏறுபவனும் ஆன இறைவன், இந்த இயமத்தான் எதை அடைய திரும்பினன் என்பதைக் கேட்டு, அதனை அருள் செய்வான். *

(அ - சொ) போது - மலர். உகந்து - விரும்பி. புரிசடை - சுருண்ட சடை. அமராபதி - தேவலோகம். இதுவே அமராவதி. இதுவே இந்திரலோகம், மாது - உமாதேவி. மால் திருமால். விடை - எருது. * -

(விளக்கம்) இயமத்தில் ஈடுபடுபவர் தேவலோகம் புக்கு இன்பம் அனுபவிப்பதோடு, இறைவனல் அவர்கள் விரும்பு வதையும் பெறுவர் என்பது கூறப்பட்டுள்ளது. இறைவன் உமை களிக்க ஆனந்த நடனம் புரிவன் என்பது சைவ மரபு. 'மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே அற்புதத் தனிக் கூத்தாடும் நாதனுர்’ என்பர் அறிந்தோர். முப்புரங்களை இறைவன் அழித்தபோது திருமால் எருதாகத் தாங்கினன் என்பது புராணம். இயமமாவது தீயனவற்றில் சிந்தையைச் செலுத்தாது கட்டுப்படுத்தல்.

கியமத்துள்ளார் எய்தும் பயன்

190. பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்

கற்றிருந் தாங்கே கருதும் அவர்கட்கு முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத் தெற்றும் சிவபதம் சேர்தலும் ஆமே. (இ - ள்) இறைவன் திருவடிகளைப் பற்றி, அவற்றி

னிடத்து அன்பு வைத்து, இறைவனது புகழையே கற்ற

வண்ணம் சிந்தித்து இருப்பவர்கட்கு, முனிவர்கள் எதிர்