பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

###

போது அவன் வரும் வழி அடைபடும். பெருங்கொடை இலாத விண்ணுட்டின் தேவர்கள் வாழும் எட்டுத் திசை களில் பல வழிகளில் அடைந்தாலும், அவ்வழிகள் குழப்பத் திற்கு இடகை ஆகாமல் பூமியைப் போலப் பழகிய வழி களாக அமையும்.

(அ சொ) நல்வழி - யோகவழி. நமன் - இயமன். இமை யவர் - தேவ்ர். பார் . பூமி. -

(விளக்கம்) தா ர னை ப் பயிற்சியாளரை இயமன் அனுகான். அவர்களை அணுக அவன் வரின், அவன் வரும் வழி அடைபட்டு அவனே வராவண்ணம் செய்திடும். இமையவர் நாட்டில் கொள்வார் இலாமையில் கொடுப்பாரும் இலர். ஆகவே அவர்கள் கொடையில்லாதவர் ஆயினர். தாரணை யாளர் தேவலோகத்தில் எவ்வழியிலும் சென்று வரும் நிலையினைப் பெறுவர். அவர்கட்கு மண்ணுலகில் நடமாடிய நடமாட்டமே விண்ணுலகிலும் உண்டாகும்.

தியானப் பயனைத் திண்ணிதின் உணர்த்தல் 195. தூங்கவல் லார்க்குந் துணைஏழ் புவனமும்

வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிட்டுத் தேங்கவல் லார்க்கும் திளேக்கும் அமுதமும் தாங்கவல் லார்க்குத் தான்இடம் ஆமே. (இ - ள்) தியான நிலையில் இருப்பவனே திருப்பாற் கடலில் துரங்கவல்ல திருமாலுக்கும், ஒன்றற்கு ஒன்று துணையான ஏழ் உலகங்களையும் படைக்க வல்லவளுகிய பிரமனுக்கும், வன்மை கொண்டு அழிக்கவல்ல உருத்திர னுக்கும், அமுதம் உண்டு திளைக்கின்ற தேவர்கட்கும் தான் இடமாக இருப்பவன் ஆவான். - -

(அ - சொ) துரங்க வல்லான் - திருமால். புவனம் - பூமி, வாங்கவல்லான் - படைக்கவல்ல பிரமன், தேங்க வல்லான் . அழிக்க வல்ல உருத்திரன். அமுதம் தாங்க வல்லார் - தேவர் ←jöT, ; -