பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

33

தழும்பு ஏறும் வண்ணம், அம்மூலளும் இடையன நக்கின: மோந்தன; அணைந்தன. கனத்தன; தமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி யினல் வாலைத் தூக்கிக் கொண்டு துள்ளி ஒடிப் பசியாறப் புல்லை மேயலாயின. பசுக்கூட்டங்கள் மகிழ்வுற்றுப் புல்லே மேயத் தொடங்கியதைக் கண்டு யோகிராம் திருமூலர் உளம் களித்து அவற்றின்முன்சென்றனர். அவை தம் வயிருரப் புல்லை மேய்ந்து காவிரியின் நீரை அருந்திக் கரை ஏறின: பின் திருமூலர் அவற்றை மரநிழலில் கூட்டி இளைப்பாறச்செய்தனர்: இதற்கிடையில் சூரியனும் மறையத் தொடங்கினன். அது போது பசுக்கூட்டங்கள் மென்மெலத் தம் கன்றை நினைத்து சாத்தனூருக்குச் செல்லும் வழியில் நடக்கையில், திருமூலரும் அவற்றின்பின் போயினர்.அங்ங்ணம் போனவர், பசுக்கள் தாம் தாம் சேரவேண்டிய இல்லங்களில் புகுவதைப்பார்த்து நின்ருர்,

இந்நிலையில், இடையளும் மூலனது மனையாள், பொழுது சாய்ந்தும் தன் கணவனுர் வந்திலரே என்ற ஏக்கத்தால் வெளியே வந்து பார்த்தபோது, யோகியாம் திருமூலர் நிற்பதைக் கண்டாள். கண்டவள், "இவர் ஏன் வீட்டிற்கு வரத்தயங்குகின்ருர்?இவருக்கு என்ன திட்டு நேர்ந்தது? என்று சிந்தித்து, அவரைத் தீண்ட நெருங்கினுள். ஆனால், திருமூலர் அதற்கு இடம் கொடுத்திலர். மூலளும் இடையனது மனைவி தன் கணவனைத் தவிர்த்து வேறு சுற்றமும் மக்களும் இல்லாத வள். தம்மைத் தீண்டக் கூடாது எனத் தன் கணவன் வடிவில் நிற்கும் திருமூலர் கூறியது, அவளுக்கு வியப்பை உண்டாக்கியது. அவள் மயங்கிளுள். நான் உங்களைத் தீண்டக் கூடாதா? என்ன இப்படிச் செய்து விட்டிரே? என்று வருந்திக் கூறினுள். அதுபோது திருமூலராம் யோகியார், "என் உடல் உன்னுடன் அணைதற்கு உரியது அன்று’ என்றுகூறி, அங்குள்ள ஒரு பொது மடத்தை அடைந்தனர்.

இடையன் மனைவிக்கு இன்னது செய்வது என்பது புரிய வில்லை. தன் கணவனது மனத்தன்மை மாறினதைக் கண்டு இரவெல்லாம் பேசிலள்; யோகியரிடமும் சென்றிலள் உறங் கிலள், பொழுது விடிந்ததும் அவள் நேரே சாத்தனூர்ப்