பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

சித்திகள் அமையா; மிக்க பொறுமை, ஆசிரியரிடம் கேட்டல் ஆகியவற்ருல் அட்டசித்தி கிட்டும். இவ்வாறு கிட்டுதற்குரிய காலம் பன்னிரண்டு ஆண்டாகும்.

(அ - சொ) பிணி - நோய். நம்சனம் - நம் சுற்றம். மேதை அறிவுடைமை. பீடு - பெருமை. ஒன்றினல் - சேர்ந்தால், வாயா - கிட்டா. துரம் . பொறுமை. ஈர்ஆறு - பன்னிரண்டு ஆண்டு. - (விளக்கம்) அட்டமாசித்தி அடைதற்குச் சுற்றத்தாருடன் சூழ்ந்திருத்தல் கூடாது. அப்படிச் சூழின் நோய் ஏற்படும்; அதாவது அவர்களால் துன்பம் உண்டாகும் என்பதாம். அவர்கள்பால் ஆசை வைத்து ஆவன செய்ய முற்படலின், ஆசை பிறவிக்கு வித்தாகும். கல்வி, ஞானம் முதலியவற்ருலும் அட்டமா சித்தியைப் பெற இயலாது. பொறுமை வேண்டும்: குரு உபதேசம் வேண்டும்; பன்னீராண்டு பொறுமையோடு இருந்த பின்னே அட்டமாசித்தி பெறலாம். கல்வி, ஞானம் இவற்ருல் செருக்கே உண்டாகும்; மனம் அடங்காது.

ஏழாண்டுகட்குப்பின் எய்தும் பயன்கள்

200. ஏழா னதில்சண்ட வாயுவின் வேகியாம்

தாழா நடைபல யோசனை சார்ந்திடும் சூழான ஓர்எட்டில் தோன்ரு கரைதிரை தாழான ஒன்பதில் தான்பர காயமே. (இ - ள்) பிராணயாமப் பயிற்சி செய்து வருங் காலத்தில், ஏழாவது ஆண்டில் சண்டமாருதம்போன்ற வேகத்தை உடையவன் ஆவான். அவனுக்குத் தாழாமல் நடைதளராமல் பல கல் தூரம் செல்லும் வன்மை கிட்டும். சூழ்ந்த எட்டாம் ஆண்டு நரைதிரை தோன்ரு. ஒன்பதாம் ஆண்டில் மேலான சரீரம் கிட்டும்.

(அ- சொ) சண்டவாயு - சண்டமாருதம் என்னும் பெருங் காற்று. வேகி - வேகமுடையவன், யோசனை - பல கல்