பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

#毒霧

உள்ளதை இருந்த இடத்தில் இருந்தே அடையலாம். இறுவே ஈண்டுப் பரகாயத்தேகம் எனப்பட்டது. பரகாயம் என்பது நினைத்ததை நினைத்தபடி முடித்தல். இதுவே நிலத்தில் புதைப்பினும் எழுதல் போன்ற சித்தி. இதுவே ஈண்டுத் தானுவது எனப்பட்டது. ஈசத்துவச்சித்தி பெற்றவர் மேலான உடலையும் படைப்பவர் ஆவர். அதனையே ஈண்டுப் பரகாயம், சேர் தன்மை என்றனர். பர என்பது மேலான என்ற பொருளது; காயமாவது உடல். இந்த வன்மை குறையாமல் பெறுவர் என்ற காரணத்தால் ஆனத உண்மை என்றனர். வசித்துவம் என்பது உலகைச் சுவாதீனம் செய்தல்; மேலும் எல்லாப் பொருளிடத்தும் கலந்திருத்தல்.

சிவமயமானவர் சிதாகாசத்தில் நடம்புரிவர் 202. சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே

முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர் சுத்தம் பெறல் ஆக ஐந்தின் தொடக்கற்ருேர் சித்தம் பரததில் திருநடத் தோரே. (இ - ள்) மனமானது செல்லும் வழியே செல்வதைத் தடுத்துச் சிவமயமாக ஆகி, முத்தி இன்னது என்பதைத் தெரிந்து இறைவன் திருவடி அடைந்த மோன நிலையின ரான சிவமுத்தர்கள் சுத்த நிலைபெற ஐம்மலங்களிலும் நின்று தங்கிச் சிதாகாசத்தில் ஆனந்தக் கூத்தினை நிகழ்த் துவா. -

(அ - சொ) சித்தம் - மனம். முத்தி - மோட்சம். மோனர் . மெளனிகள், முத்தர் - மோட்சத்திற்கு அருகர். ஐந்து - ஐந்து வகையான மலங்கள். தொடக்கு - தொடர்பு. சித்அம்பரம் சிதா காசம். திருநடம் - சிறந்த நடனம்; அதாவது ஆனந்தக் கூத்து.

(விளக்கம்) மனம் குரங்கு போன்றது: குரங்கு ஓர் இடத்தில் இராது. அடிக்கடி தாவும். அதுபோல மனமும் தாவும்; அப்படித் தாவும் மனத்தை நம்வழி திருப்பி வயப்