பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

翠

பெரியோர்களிடம் நடந்த நிகழ்ச்சியினக் கூறினுள். அவர்கள் இரக்கங் கொண்டு யோகியர் இருந்த இடத்திற்குச்சென்றனர். யோகியர் யோகநிலையில் இருப்பதைக் கண்டனர். அவரை யாதொன்றும் வினவிலர். ஒருவர்க்கொருவர். இவரை நோக்கும்போது இவர் பித்த மயக்கில்ை இவ்வாறு இருக்கிருர் என்று கருதுதற்கு இல்லை. வேறு சார்பில்ை ஏற்பட்ட நிலை என்று கூறுதற்கும் இல்லை. இவர் மனச்சேட்டைகளின் வேறு பாட்டை நீக்கித் தெளிந்த சிவயோகத்தில் அமர்ந்துள்ளார். இவரது நிலைமையினே அளவிட்டுச் சொல்ல இயலாது" என்று பேசிக் கொண்டனர், பின்னர் அந்த இடையர்குல மாதினை நோக்கி, 'அம்மா! இவர் பற்று நீங்கியவர் போல் காணப்படு கிழுர், உபதேசம் பெற்ற யோகியர்போல் தோன்றுகின்ருர். இறைவன் திருவடி இன்பத்தில் ஆழ்ந்தவர்போல் காட்சியளிக் இன்றுர். எல்லாம் அறிந்த சித்தர்போலப் பொலிகின்ருர். முன்போல உறவுமுறை கொண்டாடத் தக்க இயல்பினர் அல்லர். உனக்கு அவர் கணவராக அமையார்’ என்று கூறினர். யோகியாரது தோற்றப் பொலிவையும் பெரியவர்கள் கூறிய மொழிகளையும் கேட்ட இடையர் குல மாது வருந்தினள். அவளை அங்கு வந்தவர்கள் அழைத்துச் சென்றனர்.

யோகியராம் திருமூலர், தம்மைக் காணவந்தவர்கள் யாவரும் சென்ற பின்பு, தம் யோக நிலையினைக் கலைத்துக் கொண்டு பசுக் கூட்டங்கள் வந்த வழியே நடந்துவந்து, தமது உடலைச் சேமமுறவைத்த இடத்தில் தம்உடலைத் தேடியபோது, அவ்வுடல் அங்கு இல்லாமையினே அறிந்தார். அறிந்த அவர், தமது மெய்ஞ்ஞான உணர்ச்சியினால், இறைவர் தாம் அருளிச் செய்த ஆகம சாத்திர நுண்பொருள்களைத் தம்மால் நில உலகில் தமிழ் மொழியின் மூலம் பரவச் செய்யத் தம் உடலை மறைத்தார் போலும் என்று உணர்ந்தார். இஃது ஈசன் அருள்போலும் என்றும் அறிந்து கொண்டனர்.

பல யாதவக்குல மக்கள் யோகியரைத் தொடர்ந்து வந்தனர். அவர்களை நோக்கி, நீங்கள் என்னைத் தொடர்வது வீண். உங்கட்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று கூறி