பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

362

(அ- சொ) அஞ்சனம் - மை. ஐ . கபம். அறும் . நீங்கும். அந்தி - மாலை நேரம். செஞ்சிறுகாலே - விடியற்காலம். நஞ்சு - விஷம். நரை மயிர் வெளுத்தல். திரை - சதை சுருங்கி அசைதல்.

(விளக்கம்) வாதம் மருந்தில்ை நீங்கியது போன்று தோன்றிலுைம், நாடிகள் தோறும் சென்று தீங்கு விளைத் தலின் அது வஞ்சக வாதம் எனப்பட்டது.

உயிர் உடலில் நீடிக்க வழி

215. அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை

பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும் உண்டி சுருங்கில் உபாயம் பலஉள கண்டம் கறுத்த கபாலியும் ஆமே. (இ - ள்) பெண்களோடு புணரும் புணர்ச்சி குறைந் தால் உடலுக்கு அழிவு வராது. உடல் விரதம் முதலிய வற்ருல் சுருங்கினல் உயிர் நெடுநாள் உடலில் தங்கி இருக்கும். உணவு சுருங்கில்ை அதல்ை வரும் உபாயங்கள் பலவாகும்; கரு நிறமுடைய கழுத்துடைய சிவபெருமா ஞகவும் விளங்கலாம். .

(அ - சொ) அண்டம் - ஆண்குறி. அதற்கு - உடலுக்கு. பிண்டம் - உடம்பு. கண்டம் - கழுத்து. கபாலி-சிவபெருமான். (விளக்கம்) அண்டம் என்னும் சொல், விதை என்னும் பொருளைத் தரும். விதை கரு உண்டாவதற்குக் காரணம். ஆகவே இங்கு அண்டம் ஆண்குறியை உணர்த்தி நிற்கிறது. சுருங்குதல் ஈண்டுப் புணர்ச்சிக் காலத்து எழுச்சி அற்று இருத்தல். உணவு சுருங்கில்ை தவம் வரும். தவம் வந்தால் உயிர்நிலை பெறும்; உடலும் சுருங்கும். உடல் சுருங்கின் காம உணர்ச்சி இல்லாமல் போகும். காம உணர்ச்சி இல்லாது போனல், விஷம் உண்டும் இறவாத இறைவனைப் போல இருக்கலாம் என்பதாம்.