பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263

363 இறைவனத் தேட எய்தும் பயன்

216. நாடவல் லார்க்கு கமன்இல்லை கேடில்லை காடவல் லார்கள் நரபதியாய்கிற்பர் தேடவல் லார்கள் தெரிந்த பொருள் இது கூடவல் லார்கட்குக் கூறலும் ஆமே.

(இ - ள்) இறைவனைத் தேட வல்லவர்கட்கு எமன் இல்லை. அதாவது அழிவில்லை. இவ்வாறு தேடுபவர்கள் அரசர்களாகும் சிறப்பும் அடைவர். இது மேன்மேலும் இறைவனைத் தேடவல்லார்கள் அறிந்த உண்மையாகும். ஆகவே நீங்களும் இந்த உண்மையினை உடல்களோடு கூடியவர்கட்கும் சொல்லலாம்.

(அ- சொ) நாட இறைவனைத் தேட, நமன் - எமன். நரபதி - மக்கள் தலைவனும் அரசன்.

(விளக்கம்) இறைவனைத் தேடுக: தேடின் பலன் உண்டு. இந்த உபதேசத்தை எவர்க்கும் இயம்புக' என்பதே இம் மந்திரத்தின் பொருள். -

பிராணவாயு இந்திந்த நாளில் இயங்கும் எனல்

217. வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்

ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம் வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம் எள்ளிய தேய்பிறை தான்வலம் ஆமே.

(இ - ள்) வெள்ளி, திங்கள், புதன் கிழமைகளில் இடநாடி (இடகலை) வழியாகவும்; சனி, ஞாயிறு, செவ் வாய்க் கிழமைகளில் பிங்கலே வழியாகவும்; வியாழக் கிழமையில் இடநாடி (இடகலை) வழியாகவும், தேய் பிறை யாயின் பிங்கலே வழியாகவும் செல்லும்,