பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

(அ- சொ) ஒள்ளிய - ஒளியுடைய மந்தன் - சனி. சனிக் கிழமை. இரவி - சூரியன்; ஞாயிற்றுக்கிழமை. வள்ளிய வள்ளன்மையுடைய. பொன் - குரு; வியாழக்கிழமை.

(விளக்கம்) சரம் என்பது பிராண வாயுவின் நடமாட்டம். இடகலை என்பது இடப் பக்க நாசி. பிங்கலை என்பது வலப் பக்க நாசி. புதன் பருத்தவன் ஆதலின் விளங்கும் புதன் எனப் பட்டான். சனிக்குக் கால் ஊனம்; ஆகவே மெல்ல நடப்பவன்: எனவே அவன் மந்தன் எனப்பட்டான். மேலும் இவன் எவர்க்கும் நன்கு தெரிந்தவன் ஆதலின் ஒள்ளியன் என ئن பட்டான். வழங்கும் தன்மையன் வியாழன் ஆதலின் வள்ளிய பொன் எனப்பட்டான்.

வார சூலை

218. வாரத்தில் சூலம் வரும்வழி கூறுங்கால்

கேர்ஒத்த திங்கள் சனிகிழக் கேஆகும் பார்ஒத்த சேய்புதன் உத்தரம் பானுநாள் நேர்ஒத்த வெள்ளி குடக்காக கிற்குமே.

(இ - ள்) ஒரு வாரத்தில் சூலம் எதிர்நோக்கி வருகின்ற திசைகளைக் கூறுவோமானல், திங்கட்கிழமையில் சனிக்கிழமையில் கிழக்கே, செவ்வாய்க்கிழமையில் புதன் கிழமையில் வடக்கே சூலமாகும்; ஞாயிற்றுக்கிழமையில் வெள்ளிக்கிழமையில் மேற்கே சூலமாகும்.

(அ - சொ) சேய் - அங்காரகன்; செவ்வாய்க்கிழமை. உத்தரம் - வடக்கு. பானுநாள் - ஞாயிற்றுக்கிழமை. குடக்கு - மேற்கு.

(விளக்கம்) சூலம் எதிரில் நிற்கும் திசையில் பயணம் செய்யக்கூடாது என்னும் குறிப்பை இம்மந்திரம் குறிக்கிறது .