பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271

2? Í

மேலும், இறைவன் திருவருளால் வளரும் ஆனந்த நடனத்

தைக் கண்டு தரிசிக்கலாம். ஆணவமாம் செம்பினின்று

அறிவொளியாம் பொன்னினைப் பெறலாம். ...?

(அ - சொ) வாறு - வலிமை, பேறு. ஆறு . முறை.

(விளக்கம்). இறைவனது நடனம் பார்க்கப் பார்க்க ஆனந் தத்தை வளர்த்தலின் வளர்கூத்து எனப்பட்டது. உலக வளர்ச்சிக்குக் காரணம் ஆதலின் வளர் நடனம் எனக் கூறப் பட்டது எனினும் பொருத்தமே.

பஞ்சாட்சர நடனச் சிறப்பு 223. பொற்பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும் பொற்பாதத் தானேயே செம்புபொன் ஆயிடும் பொற்பாதம் காணத் திருமேனி ஆயிடும் பொற்பாத கன்னடம் சிந்தனை சொல்லுமே.

(இ - ள்) ஞானிகளே! சிவபஞ்சாட்சர மந்திரத்தைச் ச்ெபித்து வந்தால், இறைவனது திருவடிகளைத் தரிசிக் கலாம். ஞானப் பிள்ளைப் பேறு கிடைக்கும். இறைவனது திருவடி ஆணையாகக் கூறுகின்றேன், செம்புகூடப் பொன் குைம். இறைவன் திருவடிகளைக் கண்டு அவன் வடிவ மாகவே விவங்கலாம். ஆகவே பஞ்சாட்சர நடனத்தின் தியானச் சிறப்பினைமேக்களுக்கும் எடுத்து ஒதுங்கள்.

(அ - சொ) ஆணை சத்தியம். திருமேனி - சிவரூபம். சிந்தனை - தியானம்.

(விளக்கம்) தாம் கண்ட இன்பத்தைத் தாமே அனுபவிக் காமல், பிறரும் அனுபவிக்கக் கூறுமாறு கட்டளை இடுவதே இம்மந்திரம் ஆகும். நடராசர் தியானத்தை வற்புறுத்துவது இம்மந்திரம். நடராசர் வடிவமே பஞ்சாட்சர வடிவம். ஆகவே நடராசனது நடனம் காணல் ஐந்தெழுத்தைச் சிந்தித்தற்குக் கூறுதற்குக் காரணமாகும் என்பது இம் மந்திரப் பொருள்.