பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

2 #2

திருக்கூத்துத் தியானப் பலன் 229. சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம்

நல்ல மடவார் இயந்துட னேவரும் சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும் சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே. (இ - ள்) சொல்லப்படுகின்ற ஓர் உடலிலே புகுந்து இன்பத்தை அடையலாம். நல்ல மாதர்கள் விரும்பி உடன் வருவர். ஆசை பாசம் என்று சொல்லப்படும் பாம்புகள் நீங்கும். ஆகவே சொல்லப்படுகின்ற திருக்கூத்துத் தியானத்தின் இரகசியம் இதுவாகும்.

(அ - சொ) கூடு . உடல். நயந்து - விரும்பி, சூக்குமம் - இரகசியம். -

(விளக்கம்) பஞ்சாட்சர வடிவமான திருக்கூத்துத் தியானத்தால் எந்த உடலில் புகுந்து இன்புறவேண்டும் என்று நினைத்தாலும் அவ்வின்பத்தைப் பெறலாம். திருக்கூத்துத் தியான விசேடத்தால் உடல் அறிவொளியுடன் திகழும். பெண் களும் விரும்பும் நிலையும் ஏற்படும். இவ் வுலக இன்பம் துய்க்க நல்ல பெண்டிரும் அணுகுவர் என்பது நேர்பொருளாயினும், உள்பொருள் திருவருள் வடிவாம் சத்தியின் அன்பையும் பெறலாம் என்பதும் பொருளாகும்.

பஞ்சாட்சரத்தை இரு வகையாகவும் ஒதலாம்

230. நம்முதல் ஓர்ஜந்தின் நாடும் கருமங்கள்

அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத் தம்முதல் ஆகும் சதாசிவம் தானே. (இ) - ள்) 'ந' கரத்தை முதலாகக் கொண்ட நமசிவாய என்னும் பஞ்சாட்சரத்தை ஒதினுல் நல்வினைப் பயன்கள் எல்லாம் உண்டாகும். அவ்வெழுத்தையே முதலாகக் கொண்ட அந்தப் பஞ்சாட்சரத்தைச் செபித்து வந்தால்