பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277

277

(அ - சொ) ஆதிவிதம் முதல் தொழிலாகிய படைப் பின் செயல். தண் - கருணை நீதிமலர்- தாமரை. நேர்இழை . நேர்மையான அணிகலன்களை அணிந்துள்ள தேவி. நாமம் . மந்திரம். பாதி - நெஞ்சு. பலகால் - பலமுறை. முக்காலம் - சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம். -

(விளக்கம்) சூரியனைக் கண்டபோது மலர்தலும், காணுத போது குவிதலும் ஆகிய செய்கையினைத் தன்னிடத்தே கொண்டிருத்தலின், தாமரை நீதி மலர் எனப்பட்டது. பாதி கண்டு உள்ளம். அஃது உடலில் நடுவில் இருத்தலின் பாதி எனப்பட்டது. தேவியின் நாமம், வம், ரீம், கிரீம் என்பன.

தேவி வழிபாட்டின் பலன்

237. தையல்நல் லாளைத் தலத்தின் தலைவியை

மையலை நோக்கும் மனுேன்மணி மங்கையைப் பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின் வெய்ய பவம்.இனி மேவகி லாவே. (இ - ள்) தையல் நாயகியை, உலகநாயகியை, மயக்கம் அல்லாத முறையில் அருளுடன் நோக்கும் மனேன்மணியை, அவசரம் இல்லாமல், அவள் முன் நின்று, தோத்திரம் செய்து வணங்குங்கள். வணங்கினல் கொடிய பிறப்பு இனி வராது.

(அ - சொ) தலம் - உலகம். மை அலை - ம ய க் க ம் அல்லாத முறையில். பைய - மெல்ல. ஏத்தி - தோத்திரம் செய்து. பணி மின் - வணங்குங்கள். வெய்ய - கொடிய. பவம் - பிறப்பு. மேவகிலாவே - வந்து சேராது.

(விளக்கம்) இறைவிக்குரிய பெயர்கள் தையல் நாயகி, லோக நாயகி, மனேன்மணி என்பன.