பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

278

இறைவி, இறைவனை உயிர்கட்கு அருள் செய்ய வேண்டுவள்

238. அம்பன்ன கண்ணி அரிவை மனேன்மணி

கொம்பன்ன நுண் இடைக் கோதை குலாவிய செம்பொன்செய் பாக்கை செறிகமழ் நாள்தொறும் கம்பனே நோக்கி கவிலுகின் ருளே.

(இ - ள்) அம்பு போன்ற கண்களையுடையவளும்,

அசிவையாய்த் திகழ்பவளும், மனேன்மணியாய் விளங்கு பவளும், பூங்கொம்பு போன்ற நுட்பமான இடுப்புடைய வளும், மலர்மாலை சூடியவளும், செம்பொன் நிறமான திருமேனியுடைய இறைவனது பாதி வடிவில் நெருங்கி இருப்பவளும், பூமணம் போன்று இன்பவடிவாய் இருப்ப வளும் ஆன இறைவி, இறைவனே நோக்கி, உயிர்கட்கு அருள் செய்ய வேண்டி நிற்பாள்.

(அ - சொ) கோதை - மலர்மலை. குலாவிய - விளங்கிய. யாக்கை - சரீரம். கமழ் . மணம் வீசும். நம்பன் - இறைவன். நவில்கின்ருள் - கூறுகின்ருள்.

(விளக்கம்) இறைவிக்குத் திருவருள் என்னும் பெயரே உண்டு. ஆகவே அப் பெயருக்கு ஏற்ப உயிர்கள் மாட்டு இரக்கம் கொண்டு அவை நன்மை அடைய இறைவனிடம் வேண்டுவாள் ஆயினள்.

பார்வதி தேவியின் பூசைக்குரியன

239. நவிற்றுகல் மந்திரம் கல்மலர் தூபம்

கவற்றிய கந்தம் கவர்ந்தெரி தீபம் பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை தானே.