பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279

2ng

(இ - ள்) யாவரையும் அனுபவிக்கும்படி செய்கின்ற

பார்வதி தேவியின் பூசைக்குரியன அவளுக்குரிய மந்திரம், நல்மலர், தூபம், எல்லோரையும் தம் வசப்படுத்தும் மணப் பொருள், இருளைக் கவர்ந்து ஒளிவிடும் விளக்கு ஆகியன. அவிசினை ஏற்றுக்கொள்ளும் ஒளிவடிவாய் உள்ள இறைவ னுக்கும் ஒப்பற்ற அர்ச்சனை செய்தல் வேண்டும்.

(அ.சொ) பயிற்றும் அனுபவிக்கும்படி. நவிற்றுதல் . கூறுதல். கவற்றிய வசப்படுத்திய, க ந் த ம் - வாசனைப் பொருள். அவி - ஓமத்தியில் இடப்படும் பொருள். சோதி - ஒளி வடிவான இறைவன். அர்ச்சனை வழிபாடு.

(விளக்கம்) உலகம் உயிர்களின் நல்வினை திவினைகனை அனுபவித்தற்கு இடம் ஆதலின், பயிற்றும் உலகு எனப் பட்டது. சந்தனம், புனுகு முதலிய வாசனைப் பொருள்கள் மக்களை வசப்படுத்துதலின் கவற்றிய கந்தம் எனப்பட்டன. இறைவனுக்குரிய பொருள்களை ஒமாக்கினி மூலம் இடுதல் யாக மரபு. அங்ங்னம் இடப்படும் பொருள், அவிஸ் எனப்படும் அஃது இங்கு அவி எனப்பட்டது. இறைவனே இன்றி இறைவி இல்லை ஆதலின், இரண்டு பூசைகளும் இணைத்துக் கூறப் பட்டன.

தேவி சக்கரத் தியானத்தால் எய்தும் பயன் 240. புகைஇல்லை சொல்லிய பொன் ஒளி உண்டாம் குகைஇல்லை கொல்வ திலாமையி குலே வகைஇல்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம் சிகை இல்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே. (இ - ள்) தேவியின் மந்திரம் அடங்கிய சக்கரத்தைத் தியானம் செய்பவர்கட்குத் துன்பம் இல்லை. உடம்பில் பொன்போலும் ஒளி உண்டாகும். இவர்கள் உயிர்களைக் கொல்லார். இதன் பயனக நரகம் அடையார். ஆகவே, உலகில் நிலைபெற்ற உயிர்கட்குத் தேவி மந்திரச் சக்