பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283

283

தியானத்தின் பயன் 245. பூவினில் கந்தம் பொருந்திய வாறுபோல் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு காவி அணைந்த நடுதறி ஆமே.

(இ - ள்) மலரில் மணம் பொருந்தி இருப்பது போலச் சீவான்மாவுக்குள்ளே பரமான்மாவாகிய சிவமணம் பூத் திருக்கிறது. இச் சிவ மணத்தைச் சுவரில் எழுதப்பட்ட ஒவியம்போலத் தியான சமாதியில் இருந்து அறியும் அறி வாளர்கட்குப் புனுகு சேர்ந்த மூங்கில் போல அவர்கள் உயிர் சிறப்படையும்.

(அ - சொ) கந்தம் - வாசனை. நாவி - புனுகு தறி- தூண்; ஈண்டு மூங்கில் கழி.

(விளக்கம்) சிவ மணம் அறிய வேண்டின் அசைவற்றுத் தியானம் செய்யவேண்டும். புனுகு சேர்ந்த மூங்கில், புனுகு மணத்தைப் பெறுவதை நாம் அறிவோம். அதுபோல உயிரும் தன் உள்ளத்தில் இருக்கும் சிவமணத்தைத் தியான வழியாக அறிந்தால் சிவமாகவே விளங்கும் என்க.

யோகத்தை விரும்பிச் செய்வதால் ஏற்படும் பயன்

246. விரும்பிகின் றேசெயின் மெய்த்தவர் ஆகும்

விரும்பிகின் றேசெயின் மெய்உரை ஆகும் விரும்பிகின் றேசெயின் மெய்த்தவம் ஆகும் விரும்பிகின் றேசெயின் விண்ணவன் ஆகுமே.

(இ - ள்) யோகநெறியை விருப்பத்துடன் செய்தால் உண்மைத் தவசியர் ஆகலாம்; குரு உபதேசங்களைப் பெறலாம்; உண்மைத் தவநிலையையும் அடையலாம்; தேவனும் ஆகலாம்,