பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

2.90.

ப்பெண்ணும் குவிந்த முலைகளையுடைய பூங்கொடியைப் போன்றவளும் ஆகிய

(அ - சொ) கோமளம் - அழகு. நல்கும் த்ருவர்

(விளக்கம்) மலை குறிஞ்சி நிலைத்தைச் சேர்ந்தது; குறி யாவது மலேயும் மலையைச் சார்ந்த இடமும் ஆகும். இம் மலைக்குத் தலைவன் குறவனவான். குறவன் எனினும் வேடன் எனினும் ஒன்றே. பார்வதிதேவி மலையரசனும் குறவனுக்குப் பெண்ணுகப் பிறந்தமையின் அவளைக் குறப்பெண் என்றனர்.

ஆறு சமயங்களும் அடைவது ஒருவனையே

255. ஒன்றது பேருர் வழிஆ றதற்குள

என்றது போல இருமுச் சமயமும் நன்றிது தீதிது என்றுரை யாளர்கள் குன்று குரைத்தெழு நாயைஒத் தார்களே. (இ- ள்) சென்று சேரவேண்டிய ஊர் ஒன்றுதான். ஆனல் அதனை அடைவதற்குரிய வழிகள் ஆறு. அதுபோல மோட்ச உலகை அடைவதற்கு ஆறு சமயங்கள் உள்ளன, அச்சமயங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் தங்கள் சமயங் களைப் பற்றிப் பேசும் போது, இந்தச்சமயம் நல்ல சமயம், அந்தசமயம் தீயசயம் என்று கூறிக் கொள்வர்: அவர்கள் மலையை நோக்கிக் குரைக்கும் நாய்க்கு ஒப்பாவர்.

(அ - சொ) இருமுச்சமயம் - ஆறு சமயங்கள். (விளக்கம்) சிவனை வழிபடும் சமயம், விஷ்ணுவை வழிபடும் சமயம், சத்தியை வழிபடும் சமயம், விநாயகரை