பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

23%

(விளக்கம்) இறைவ. லனுக்குக் காணப்படாததோர் . புலனுக்குக் காணப்படும் பொருள் குருவே. அவனையே இறைவகை, நம் தலைவகைக் கொள்ள

சிவமான ஞானம் சிவானந்தம் கல்குமே.

(இ - ள்) சிவமாகிய பேர் அறிவைத் தெளிந்த அளவில் ஒளியுடைய எல்லாச் சித்திகளும் கைவரும். சிவமான பேர் அறிவைத் தெளிவுற உணர்ந்தால் ஒள்ளிய முத்திப் பேறு உண்டாகும். அச் சிவமான பேரறிவு சாயுச்சிய நிலையை அடைய அச்சிவப்பேர் சிவனோடு இணைந்து ஆனந்தத்தைக் கொடுக்கும்.

(அ - சொர் ஞானம் - பேரறிவு. சித்தி - எல்லாம் செய்ய வல்ல ஆற்றல். முத்தி -மோட்சம் சிவபரம் - சாயுச்சிய பதவி. நல்கும் - கொடுக்கும்.

(விளக்கம்) சிவமும் அறிவும் வேறன்று. அன்பும் சிவமும் போல ஒன்று. ஆகவே சிவமான ஞானம் எனப்பட்டது. சித்தி பெற்றபோது எங்கும் விளங்கும் விளக்கம் பெறுதலின், ஒண் இத்தி என்றனர். ஒண்மை ஒளியாகும். முத்தி நிலையில் இருள் ஏதும் இல்லாமையால் ஒண் முத்தி என்றனர். சாலோகம் என்பது புண்ணிய உலகை அடைதல். சாமீபம் என்பது இறை ஆகை நெருங்குதல். சாரூபம் என்பது அவ்வுலகை அடைய அவனது வடிவம் உறுதல். சாயுச்சியம் என்பது இறைவனுடன் ஒன்றுபட்டிருத்தல்: அஃது ஈண்டுச் சிவபரம் எனப்பட்டது.