பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

##4

(அ - சொ) மா - சிறந்த தந்திரம் - நூல் உணர்வு. தானம் - உலகம். சுந்தரம் - அழகு. துாய் . சுத்தமான. நெறி - வழி. எந்தை எம் தந்தை பிரான் - தலைவன். இணை - இரண்டு.

(விளக்கம்) அடி: ஈண்டுத் திருவடி ஞானம்; அந்த ஞானமே எல்லாம் தரவல்லது. மருந்து, ஈண்டு உடல்நோய்

பதை மட்டும் குறிக்காது, பிறப்பு நோயையும்

மெளனத்தின் விளைவுகள்

261. மோனம்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்

மோனம் கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும் மோனம்கை வந்துமை யாம்மொழி முற்றும் காண் மோனம்கை வங்தைங் கருமமும் முன்னுமே.

(இ - ள்) மெளனப் பயிற்சி கை வந்தவர்களுக்கு மோட்ச இன்பம் கைகூடும். எண்வகைச் சித்திகளின் பயிற்சி ஏற்பட்டு அவை ஏவல் செய்ய முன்வந்து நிற்கும். பிரணவ மொழியும் கைவரப் பெறும். இறைவனைப் போல ஐந்து தொழில்களைச் செய்யும் ஆற்றலும் அமையும்.

(அ - சொ) மெளனம் - வாய்விட்டுப் பேசாதிருத்தல். முத்தி - மோட்சம். சித்தி - எண்வகைச் சித்திகள், ஊமை யாம் மொழி - ஒம் என்னும் பிரணவச்சொல். ஐ . ஐந்து. கருமம் - செயல்கள். முன்னும் - கைகூடும்.

(விளக்கம்) பேசாது சும்மா இருத்தல் மெளனம் எனப் படும். எண்வகைச் சித்திகள் முன்பே விளக்கப்பட்டன. முன்னிற்கும் என்றதன் குறிப்பு, அவை ஏவல் செய்யக் காத்திருக்கும் என்பதாம். ஊமை பாம் எழுத்தாவது பேசாத