பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

4. திருமூலர் வரலாற்றைப் பற்றிய ஆய்வுரை

திருமூலர் வரலாற்றை அறிந்து கொள்வதற்குத் துணை செய்வன, சுந்தரர் பாடிய திருத்தொண்டைத் தொகை, நம்பி ஆண்டார் செய்த திருத்தொண்டர் திருவந்தாதி, சேக்கிழார் செய்த பெரிய புராணம், உமாபதி சிவாசாரியர் பாடிய திருத் தொண்டர் புராண சாரம் என்பன. -

சுந்தரர் வாக்கால் திருமூலன் வாழ்க்கையைப் பற்றிய குறிப்பு ஒன்றும் கிடைத்திலது. அவரது வாக்கின் மூலம் திருமூலர் என்னும் பெயர்மட்டும் அறிய வருகிறது. அத்துடன் நம்பிரான் திருமூலன் என்பதும் அறிய வருகிறது. சுந்தரருக் குப் பின்வந்த நம்பி ஆண்டார் நம்பிகள் மூலம், திருமூலர் வரலாறு,

குடிமன்னும் சாத்தனுர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்

`-- பைபுக்கு முடிமன்னு கூனல் பிறையாளன் தன்னை முழுத்தமிழின் படிமன்னு வேதத்தின் சொற்படி யேவர விட்டென்உச்சி அடிமன்ன வைத்த பிரான்மூலன் ஆகின்ற அங்ங்ணனே என்பது. இதன்வழி அறியும் வரலாறு, "சாத்தனூர்ப் பசுக் களே மேய்த்தவன் உடம்பில் புகுந்து சிவபெருமானைப் பற்றி வேதத்தில் சொன்னபடி தமிழில் பரப்பியவர் திருமூலர்' என்பது.

நம்பியார் வாக்கில், சாத்தனூர்ப் பசுக்களை மேய்த்தவன் யாவன்? அவன் பெயர் யாது? ஏன் அவன் உடலில் திருமூலர் புக்கனர்? போன்ற விளுக்கட்கு விடைகள் காணப்பட்டன. ஆளுல், சேக்கிழார் இவ் வினுக்களுக்கு எல்லாம் ஏற்ற விடைகளை விளக்கியுள்ளனர். அதனைத் திருமூலர் வாழ்க்கை