பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

}

(இ) - ள்) மக்கள் அஞ்ஞானத்தை நீக்கும் குருவைத் தேடி அடையார். அஞ்ஞானத்தைப் போக்காத குருவைத் தான் அடைவர். அவர்கள் செயல் பிறவிக்குருடாக இருக்கும் இரண்டு குருடர்கள் கண்மூடி ஆடும். ஆட்டம் ஆடிப் பள்ளத்தில் விழுதலுக்கு ஒப்பாவர்.

(அ-சொ) குருட்டு - அஞ்ஞானம், அறியாமை.

(விளக்கம்) குருட்டாட்டம் என்பது சிறு பிள்ளைகள்:தம் கண்ணைத் துணியாமல் மறைத்துக் கொண்டு, எதிரிலுள்ள பிள்ளைகளைத் தொட முயற்சி செய்தல்,

நல்ல குருவால் எய்தும் பயன்

269. கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக உள்ள பொருள்உடல் ஆவி உடன்ஈக எள்ளத் தனையும் இடைவிடா தேகின்று தெள்ளத் தெளியச் சிவபதம் தானே.

(இ - ள்) உலக மக்களே குருவைப் பெறுவதாக இருந்தால் நல்ல குருவைப் பெறுக. அந்த குருவுக்கு உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்க. சிறி தேனும் தடையில்லாமல் அவர் முன்னின்று வழிபட்டு அவரது உபதேசப்படி தெளிவு பெற்ருல், மங்களமான வீட்டின்பம் உறுவது நிச்சயம்.

(அ - சொ) ஆவி - உயிர். சிவபதம் - மோட்ச வீடு.

(விளக்கம்) குருவுக்கு வேண்டியதை எல்லாம் தருதல் வேண்டும் என்ற கருத்தில் பொருள் உடல் ஆவிகளைத் தருக என்றனர். ஆசிரியரை நீங்காதிருக்க இடைவிடாது நின்று எனறனா,