பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

301

36; it

நல்ல மாளுக்கன்

270. சந்குணம் வாய்மை தயாவிவேகம்தண்மை

சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமை

சிற்பர் ஞானம் தெளியத் தெளிவோர்தல்

அற்புத மேதோன்றல் ஆகும்சற் சீடனே.

(இ - ள்) நல்ல சீடனுக்கு இருக்க வேண்டிய பண்பு கள் நல்ல குணம், சத்தியம், இரக்கம், நல்ல அறிவு, பொறுமை, நல்ல குருவின் திருவடிகளை நீங்காது ஒழுகல், தத்துவப் பொருளான இறைவனைத் தெளிதல், சிந்தித்தல், அற்புத நிகழ்ச்சி தோன்றல் என்பன.

(அ - சொ) சத் - நல்ல. வாய்மை - சத்தியம். தண்மை . இரக்கம். சாயை நிழல். சித் - உண்மையான. பரஞானம் - இறைவனே உணரும் மேலான அறிவு. ஒர்தல் - ஆராய்தல். அற்புத' - அருள். -

(விளக்கம்) நிழல் நம்மை விட்டுப் பிரியாதது போல் ஞானசாரியனை விட்டுப் பிரியக் கூடாது என்பதற்குச் சாயை உபமானம் ஆக்கப்பட்டது.

கோயில் தோற்றத்தின் உண்மை

271. தூய விமானமும் தூலம்.அ தாகுமால்

தூய சதாசிவம் ஆகும்கல் சூக்குமம் பாய பலிபீடம் பத்திர லிங்கமாம் ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்க்கே. (இ - ள்) கோவிலின் மேல் உள்ள கோபுரம் (விமானம்) தூலலிங்கம் ஆகும். கோவிலின் மூலட்டானத் தில் இருக்கும் தூய லிங்கமாகிய சதாசிவம் சூட்சும லிங்க மாகும். பரந்த பலிபீடம் இடப இலிங்கமாகும். இவ்வாறு இறைவன் கோவிலே ஆராய்ந்த அறிஞர்கள்.உணர்வார்கள். (அ - சொ) விமானம் - கோபுரம். துலம் -பருப்பொரு வளாகிய இலிங்கம். துTய சுத்தமான. சதாசிவம் -