பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305

305

(இ - ள்) பிராம்மணர்கள் வசிக்க ஆயிரம் வீடுகள் அமைப்பினும் பயனில்லை. கோயில்களுக்குக் கோபுரம் ஆயிரம் கட் ப்பினும் பயன் இல்லை. இவை இரண்டும், சிறப்பித்துக் கூறப்படும் ஞானி ஒருவன். நம் வீட்டில் ஒரு பகல் உணவருந்திப் போவதற்கு நிகர் ஆக

அகரம். வீடு. ஆரியர் - பிராம்மண்ர். சியுடைய கோபுரம். பகரும். சிறப்பித்துக் கூறப் படும். ஊண் - உணவு. -

(விளக்கம்) அகரம் சிறப்பாகப் பிராம்மணர்கள் வாழும் வீட்டையே குறிக்கும். பிராமணர்கட்கு வீடுகட்டித் தருதலும், ஆலயத் திருப்பணி செய்தலும் அறம் ஆதலின் அவற்றை ஈண்டுக் குறிப்பிட்டனர். ஞானிக்கு உணவளித்தல் சிறந்த அறம் என்று இம்மந்திரம் குறிப்பிடுகிறது.

இறைவன் பிச்சாடன மூர்த்தியாக

இருத்தற்குக் காரணம் 217. பரந்துல கேழும் படைத்த பிரான

இரத்துணி என்பர்கள் எற்றுக் கிரங்கும் கிரந்தரம் ஆக கினையும் அடியார் இரத்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே. (இ - ள்) பரந்த ஏழு உலகங்களையும் உண்டாக்கிய இறைவனையும், இவன் பிச்சை எடுத்துப் பிழைப்பவன் என்று ஒரு சிலர் ஏளனமாகப் பேசுவர். அவன் ஏன் அவ் வாறு பிச்சை எடுக்கிருன் என்பதைச் சிறிதும் அறிந்திலர். அவன் பிச்சை எடுத்தல், எப்போதும் தன்னை நினைக்கும் ஞானிகள் பிச்சை எடுத்து உண்டு தன் திருவடியை அடையச் செய்வதற்காகவே ஆகும். -

(அ- சொ) இரந்து - பிச்சை எடுத்து.உணி, உண்பவன். எற்றுக்கு - ஏன். நிரந்தரம் எப்போதும். கழல் - திருவடி.

30 سم ويلي