பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

306

(ளிளக்கம்) உலகங்கள் பலப்பல. அவற்றை மூன்ருகவும் ஏழாகவும், பதிலைாகவும் கூறுதல் உண்டு. பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், சனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம் என்பர்; இவை மேல் ஏழு உலோகங்கள். அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இராதலம், பாதாலம் எனக் கீழ்உலகங்கள் ஏழு என்று கூறுதலும் உண்டு. ஞானிகள் பசி வந்திடில், அதன் பொருட்டுத் துன்புருது வீடுதோறும் இரந்து உண்டு தம்யோக நிலையைக் கைவிடாதிருக்க, இறைவன் , பிச்சை எடுத்துக் காட்டின்ை என்க. பிச்சைச் சேர் - பில்லை என்பது பழமொழி.

ஞானியின் உடம்பை எரித்தல் கூடாது

278, அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்

வெந்திடின் நாடெலாம் வெம்பும் தீயினில்

கொந்தது நாய்கரி நுகரின் உள்செரு

வந்துநாய் கரிக்குண வாகும் வையமே.

(இ - ள்) அழிவில்லாத ஞானியின் சரீரம் நெருப்பில் வெந்தால் உலகம் தீயில்ை அழியும்; நாடு துன்பத்துள் ஆழும். அந்த ஞானியின் உடலே நாய் நரி தின்ருல் உள் நாட்டில் கலகம் உண்டாகும். நாடே அழிந்து, அங்கு வாழ்ந்தார் உடலங்கள் நாய் நரிகளால் உண்ணப்படும்.

(அ - சொ) அந்தம் - அழகு. ஆகம் - உடம்பு. வெம்பும் தீயும். நொந்த - துன்புறும். நுகரின் - உண்டால். உள்செரு. உள் நாட்டுக் கலகம். வையம் - உலகம்,

(விளக்கம்) ஞானியின் உடம்பு அழியுமே அன்றி, அவனது புகழ், ஞானம் அழியா. ஆதலின் 'அந்தம் இல் ஞானி’ எனப் பட்டான். ஞானியைப் புதைக்க வேண்டும், அதாவது சமாதி செய்தல் வேண்டும் என்னும் கருத்து, இம் மந்திரத்தில் கூறப் படுகிறது.