பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

29

வரலாறு என்ற இடத்துக் காணவும். இதனுல் திருமூலர் வரலாற்றின் முழு அமைப்பையும் அறியச் சேக்கிழார் நூலே வழிகாட்டி ஆகும் என்பது புலனுயிற்று. உமாபதியார் வாக்கான திருத்தொண்டர் புராணசாரம் என்னும் நூல் வழி காணும் திருமூலர் வரலாற்றுக் குறிப்பு, சேக்கிழார் கூறி யுள்ள குறிப்பை அப்படியே அடி ஒற்றியதாகும். அப்பாடவேப் பார்ப்பின் அது நன்கு விளங்கும். அதாவது,

கயிலாயத் தொருசித்தர் பொதியில் சேர்வார்

காவிரிசூழ் சாத்தனுர் கருதும் மூலன் பயிலாகோ யுடன்வி பத்துயர் நீடும்

பசுக்களைக்கண் டவன்உடலில் பாய்ந்து போத அயலாகப் பண்டைஉடல் அருளால் மேவி

ஆவடுதண் டுறைஆண்டுக் கொருபா வாகக் குயிலாரும் அரசடியில் இருந்து கூறிக்

கோதிலா வடகயிலே குறுகி ஞரே.

என்பது.

இப்பாடலில் இடையன் இறந்தமைக்குக் காரணம், நோய் என்பது குறிக்கப்பட்டுள்ளது. ஆனல் சேக்கிழார் வாக்கு, "மேய்க்கின்ருன் வினைமாள வாழ்நாளை வெந்தொழில்வன் கூற்றுண்ண வீடி நிலத்திடை வீழ்ந்தான்' என்பது. அதாவது 'அவனது வினை அவனது வாழ்நாட்களை மாளச் செய்ததால், இயமனும் அதற்குத் துணையாக நின்று, அவன் உயிரை உண்ண இடையன் இறந்தான்!” என்பதாம்.

இதுவரை நாம் கண்ட திருமூலர் வரலாற்றுக் குறிப்புக் கள், புறச் சான்றுகளாகும். இனி அவரது வரலாற்றிற்குத் துணை செய்யக்கூடிய அகச் சான்றுகள் எவையேனும் உண்டா என்பதையும் ஆய்தல் வேண்டும்.

திருமூலரது வரலாற்றை அறிதற்கு அவரது வாக்குகளே அகச் சான்ருக இருந்து துணை புரிகின்றன. அவ்வாக்குகளே அவர் பாடியுள்ள திருமந்திர நூலில் திருமூலர் வரலாறு