பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

308

மண்ணில் அழிய விட்டால், நாட்டின் அழகு கெடும். உலகம் எல்லாம் தீப்பிடித்துக் கலங்கும்.

(அ- சொ) நண்ணி - நெருங்கி. பங்கம் - அழிவு. மண்டிநெருங்கி,

(விளக்கம்) ஞானிகளின் உட்ம்பைச் சமாதி நெய்தல் சிறந்த அறமாகக் கொள்ளப்பட்டது. ஞானியின் உடலை எடுத்துப் புதைக்காமல், சமாதி செய்யாமல் விடுவிட்டால் நாட்டுக்குத் நீங்கு விளையும்.

ஞானியின் உடலைச் சமாதி செய்தலிலை

x வரும் பயன்

281. அந்தமில் ஞானி அருளே அடைந்தக்கால் அந்த உடல்தான் குகைசெய் திருத்திடில் சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும் அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.

(இ) - ள்) எல்லையிட்டுக் கூறமுடியாத மெய்ஞ்ஞானி இறைவன் திருவடிப்பேற்றை அடைந்தால், அவனது உடலைச் சமாதி செய்துவிட்டால், அழகிய அரசர்களும், பழமை வாய்ந்த உலகில் வாழும் யாவரும், முடிவில்லாத இன்ப அருளே அடைவார்கள்.

(அ சொர் அந்தம் - எல்லே. அருள் - இறைவன் திருவடிப் பேறு. குகைசெய்து - நிலத்தில் பள்ளம் தோண்டிச் சமாதி செய்து. சுந்தரம் - அழகு. தொல்புவி- பழைய உலகம். அந்தம் முடிவு.

(விளக்கம்) அருள் அடைதலாவது, இறைவன் திருவடி யில் கலந்தின்புறல்.