பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

3 : {}

(அ- சொ) மனை - வீடு. உன்ன அரும் . நினைப்பதற்கு அருமையான. கானம் - காடு. குகைக்கு - சமாதி செய்தற்கு. எய்தும் - பொருந்தும்.

(விளக்கம்) ஞானியார் இருந்த இடமே அவரது திருஉடல்

சமாதி செய்தற்குச் சிறந்தது ஆதலின் அதனை முன்கூறினர். பூமியில் கண்ட கண்ட இடத்தில் சமாதி செய்தல் கூடாது. ஆதலின் நகரின் நல்பூமி என்றனர். காடு அடர்ந்து இருண்டு

லங்குகள் வாழும் இடம் ஆதலின், உன் என்றனர். -

ஞானியின் சமாதியினை அமைக்கும் முறை 284, பஞ்சலோ கங்கள் கவமணி பாரித்து

விஞ்சப் படுத்ததன் மேல் ஆசனம்இட்டு முஞ்சி படுத்துவெண் ணிறிட்ட தன்மேல் பொன்செய்த கல்சுண்ணம் பொதியலும் வேண்டும்.

(இ - ள்) சமாதிக் குழியில் ஐந்து உலோகங்களையும் நவமாணிக்கக் கற்களையும் இடுதல் வேண்டும். அவற்றின் மேல் அமர்வதற்கு நல்ல பீடம் அமைத்தல் வேண்டும். அவ்விருக்கை மீது தருப்பைப் புல்லைப் பரப்புதல் வேண்டும். அதன் மீது திருநீற்றை நன்கு குவித்தல் வேண்டும். இவ்வாறெல்லாம் செய்த பிறகு ஞானியின் உடலத்தை வைத்தல் வேண்டும். அதன் பிறகு சமாதிக் குழியைச் சுண்ணும்பினுல் பூசுதல் வேண்டும்.

(அ - சொ) பஞ்சலோகங்கள் - பொன், வெள்ளி, ஈயம் செம்பு, இரும்பு ஆகிய ஐந்து உலோகப் பொருள்கள். நவமணி - ஒன்பது இரத்தினங்கள். பாரித்து - பரப்பி. விஞ்சப் படுத்து - மேல் பரப்பி. முஞ்சி - தருப்பைப்புல். நீறு - விபூதி. பொன் - அழகிய சுண்ணம் - சுண்ணும்புச்சாந்து. பொதியல் - பூசுதல்.

(விளக்கம்) நவரத்தினங்களை இடுதல் அரிதாதலின் அந்த ஒன்பது மணிகளின் தனித்தனி நிறம் அமைந்த ஒளிக்கற்களே