பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

கிர்களே. இதன்

அன்த்ப்பெற்றும் இறைவன் திருவடிகளைப் போற்ருமல் அப் பிறவியினை வீளுக்குவது பெருந்தவருகும்.

அரிய உபதேச மொழிகள்

299. செல்லும் அளவில் செலுத்துமின் சிந்தையை

வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை

இல்லை எனினும் பெரிதுளன் எம்இறை நல்ல அரன்நெறி நாடுமின் விேரே.

(இ - ள்) மக்களே! உங்கள் மனதைக் கூடிய மட்டும் நல்ல வழிகளிலே செலுத்துங்கள்: இயன்ற அளவு உண்மையையே பேசுங்கள்! இறைவன் ஒருவன் இல்லை என்று நாஸ்திகர்கள் சொல்லுவர். அப்படிக் கூறுபவர்கள் அறியாதவர்கள். அவ்விறைவன் உறுதியாக இருக்கிருன். ஆகவே நீங்கள் நன்மைதரும் இறைவன்' கூறிய வேத ஆகம வழிகளை உணர்ந்து நடவுங்கள். -- - -

(அ - சொ) செல்லும் அளவு - கூடிய மட்டும். வல்ல பரிசு - இயன்ற அளவு. வாய்மை - உண்மை. இறை - இறைவன். அரன் - சிவபெருமான். நெறி - வேத ஆகம நல்நெறிகள். நாடுமின் தேடுங்கள்.

(விளக்கம்) இறைவன் இல்லாத பொருள் அல்லன்: அவன் என்றும் இருப்பவன். அவன் வழி செல்வதே மக்களின் கடமை. சத்தியம் தவறக் கூடாது. மனத்தை நல்வழியில் செலுத்தவேண்டும்.