பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

321

321

உணர வேண்டியவை

300. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமன்இல்லை நாளுமே

சென்றே புகுங்கதி இல்லேதும் சித்தத்து

கின்றே நிலைபெற நீர்நினைத் துய்மினே.

(இ) - ள்) குலம் பல இல்லை; ஒன்றே. தெய்வங்களும் பல இல்லை; ஒன்றே ஆகும். என்றும் நல்லனவற்றையே கூசாமல் எண்ணுங்கள். இயமன் அணுகான். அவ்வாறு நல்லனவற்றைச் சிந்தித்தலாகிய அதைத் தவிர்த்து வேறு சிந்திப்பதற்கு உங்கள் உள்ளத்தில் இல்லை. உங்கள் யூத உடல் மறைந்தாலும் புகழ் உடல் என்றும் நிலைத்து இருக்க இறைவனை நினைந்து, நல்லனவற்றை நினைந்து ஈடேறுங்கள்.

(அ . சொ) ந ம ன் - இயமன். நாணுமே - கூசாமல். சித்தம் - உள்ளம்.

(விளக்கம்) பிறப்பால் எல்லாம் ஒன்றே: வேறு இன்று. அவ்வாறே தெய்வங்கள் பல இல்லை; ஒன்றே! ஆகவே நல்லன. வற்றைச் சிந்தித்து, இறைவனையும் உள்ளத்தில் கொண்டு உய்ய வேண்டும். நமன் இல்லை என்பதன் குறிப்பு, எமவாதை ஏற்படாது என்பதாம். நம்மை அழைத்துச் செல்ல இறைவனே வருவன் என்பதுமாம்.

நல்ல உபதேசங்கள்

301. இக்காயம் நீங்கி இனிஒரு காயத்தில் புக்குப் பிறவாமல் போம்வழி நாடுமின் எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென்று அக்காலம் உன்ன அருள்பெற லாமே. (இ - ள்) மக்களே! இந்த உடம்பை ஒழித்து இனிமேல் ஒடு சரீரத்தில் புகுந்து பிறவாமல் மோட்ச உலகிற்குச் செல்லும் நல் வழியைத் தேடுங்கள். நாம் எடுத்துள்ள

து.--21