பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

326

(அ.சொ) நாட்டன் - சினேகிதன், மறுமை - அடுத்த பிறவியின் நிலை. இம்மை - இப்பிறவியின் நிலை. துய்ப்பான். அனுபவிப்பவன்.

(விளக்கம்) பிறரால்தாம் நன்மையும் தீமையும் ஏற்படு கின்றன என்று கருதுதல் தவறு. நன்மை தீமைகட்கும் புண்ணிய பாவங்கட்கும் நாம்தான் காரணர் ஆவோம்.

ஆன்மா மலத்தோடு பொருந்தும் கிலை 308, ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்குப் பேணிய மாயை பிரளயா கலருக்கே ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே காணும் சகலர்க்குக் காட்டும் மலங்களே. (இ - ள்) ஆணவமலம் ஒன்றே உடையவர். விஞ்ஞான கலர். ஆணவ மலத்துடன் மாயா மலமும் உடையவர் பிரளயாகலர் எனப்படுவர். ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களையும் உடையவர் சகலர் எனப் படுவார்.

(அ - சொ) பேணிய விரும்பிய. - (விளக்கம்) மலங்கள் மூன்று. அவை : ஆணவம், கன்மம், மாயை எனப்படும். இம்மூன்று மலங்களும், ஒருங்கே ஆன்மாவுடன் பொருந்தி இருத்தலும் உண்டு. அஃது ஆன்மாவின் தீவிர ஆன்ம உணர்ச்சியைப் பொருத்தது. ஆகவே, ஒரு மலம் இருமலம் மும்மலமும் உடைய ஆன்மாக்கள் இன்ன என்பதை இம்மந்திரத்தால் ஆசிரியர் உணர்த்தினர். ஆணவ மலம் ஒன்றேயுடைய விஞ்ஞானகலர் கட்கு இறைவன் அவர்கள் அறிவில் தன்மை மாத்திரையாய் நின்று திருவருளை உண்டாக்கி மலத்தைப் போக்கி இரட்சிப் f.f#?^3ğj”.

பிரளயாகலர்க்கு இறைவன் மான், மழு, நான்கு கைகள், திருநீலகண்டம், முக்கண்களுடன் அருள் திருமேனிகொண்டு எழுந்தருளி, முன்னிலை மாத்திரையாய் நின்று மலத்தைப் போக்கித் திருவருள் புரிவன், -