பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

327

327

சகலர்கட்கு இறைவன் மானிட வடிவில் குருவாக வந்து திட்சைகள் செய்து மலத்தைப் போக்கித் திருவருள் புரிவன்.

ஒன்றை உன்னும்போது ஒன்று மறையும்

309. மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே. (இ - ள்) பெரிய மதமுடைய யானை மரத்தை மறைத்தது. அந்த யானையே மரத்தில் ஒடுங்கியது மண், நீர், நெருப்பு. காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்கள், பரனே மறைத்தன. அப் பூதங்கள் அப்பரத்தில்தான் மறைந்தன.

(அ - சொ) மா - பெரிய. பரம் - பரம்பொருள். பார் - பூமி. -

(விளக்கம்) நாம் மரத்தால் செய்யப்பட்ட யானையின் உருவைக் காண்கின்ருேம். யானையைப் பற்றிய எண்ணத்தோடு அம்மர யானையை உற்று உற்று நோக்கும்போது, யானையின் வடிவமே பன்னிப் ப ன் னி வருமே அன்றி, அது மரத்தால் செய்யப் பட்டது என்ற எண்ணமே தோன்ருது. யானையின் உருவத்தை விடுத்து, அம்மரத்தின் உயர்வு தாழ்வு இவைகளைப் பற்றி எண்ணும்போது, யானையின் வடிவம் அடியோடு மறைந்து போகும். அது போலவே நாம் காண்கின்ற மண், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய இந்த ஐந்து பூதங்களின் நினைவு எழுகின்றபோது, இவற்றிற்குக் காரணன் இறைவன் அல்லளுே என்ற நினைவு வருதல் இல்லை. அந்நினைவு பஞ்சபூத எண்ணத்தில்ை பரமனை நினைக்கும் நிலையில் அமைவதில்லை. ஆகவே பஞ்சபூதத்தில் பரம் மறை கிறது. அவ்வாறே பரத்தைப் பற்றிய நினைவு தடித்தபோது பஞ்சபூதங்கள் மறைந்தொழிகின்றன. ஆகவே உண்மையைக் காணும் முயற்சியில் நாம் முந்துதல் வேண்டும்,