பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

31

ஏற்பட்டது. இவரது அருமை பெருமை நோக்கித் திருமூலர் என்னும் பெயர் வழங்கப்பட்டது.

திருமூலர் திருக் கயிலாயத்தினின்று புறப்பட்டனர் என்பர் சேக்கிழார். அங்ங்னம் அவர் திருக்கயிலையினின்று புறப்பட்ட தாகத் திருமூலர் வாக்கியங்களில் இல்லை. திருக்கயிலையினின்று புறப்பட்டுப் பொதிகையில் அகத்தியருடன் தங்க உளம் கொண்டார் என்னும் அருள் மொழித்தேவர் கருத்துக்குத் திருமூலர் வாக்கு அரணுக இல்லை.

ஒரு சிலர், வளப்பில் கயிலை வழியில் வந்தேனே' என்னும் அடியைக்காட்டி, இது கயிலையிலிருந்து அவர் புறப்பட்டதைக் காட்டாதோ?’ என்னலாம், ஈண்டு, கயிலையில் வந்தேனே என்பது "திருக்கயிலாய பரம்பரையின் வழி வந்தேனே?" என்னும் பொருள் தரும் அடியாகும். சேக்கிழார் திருக்கயிலே மலையினின்று புறப்பட்டுப் பொதிகை நோக்கித் திருமூலர் புறப்பட்டா ரென்பதை,

மற்றவர்தாம் அணிமாதி வருஞ்சித்தி பெற்றுடையார் கொற்றவனுர் திருக்கயிலை மலகின்றும் குறுமுனியால் உற்றதொரு கேண்மையில்ை உடன்சிலகாள் உறைவதற்கு நற்றமிழின் பொதியமலை கண்ணுதற்கு வழிக்கொண்டார்.

என்று கூறியுள்ளனர்.

திருமூலர் புறப்பட்டு இடையே பலதலங்களைக் கண்டு வணங்கினர் என்பர் சேக்கிழார். ஆனல் திருமூலர் சிதம்பரத் தலத்தைத் தாம் வணங்கியதாகக் கூறுகின்றனரே ஒழிய ஏனைய தலங்களைக் குறிப்பிட்டிலர். சிதம்பரத் தலத்துப் பொன் மன்றைக்கண்டு வணங்கியதை, "மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்றவர் என்ளுேடு எண்மருமாமே என்றும், 'தப்பிலா மன்றில் தனிக் கூத்துக் கண்டபின்' என்றும்கூறுதல் காண்க. ஈண்டு எண்மர் ஆவார், சனகர், சனந்தர், சஞதரர். சனற்குமாரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் என்போர்: சேக்கிழார் திருமூலன் சிதம்பரத்தை அடைந்து ஆனந்தக் கூத்தைக் கண்டு களித்து இன்புற்முர் என்பதை,