பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

332

வேதமும் ஆகமும் வேறு அல்ல 317. வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன் நூல் ஒதும் பொதுவும் சிறப்பும்என்றுள்ளவை நாதன் உரைஅவை காடில் இரண்டக்தம், பேதம்அ. தென்பர் பெரியோர்க் கபேதமே.

(இ - ள்) வேதமும் ஆகமும் உண்மையை எடுத் துரைக்கும் நூல்கள் ஆகும். இவை இரண்டும் இறைவனல் அருளிச் செய்யப்பட்டவை. இவற்றுள் வேதம் பொது நூல் என்றும், ஆகமம் சிறப்புநூல் என்றும் கருதப்படும். இவ்வாறே வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இரண்டு அந்தங்களும் இறைவனது மொழிகளே. சிலர் இவ்விரண் டும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டவை என்று கூறுவர். இவற்றின் உண்மைக் கருத்தை அறிந்த பெரியோர் களுக்கு இவ்விரண்டும் பேதம் அற்றவை ஆகும்.

(அ - சொ) நூல் - புத்தகம். நாதன் - இறைவன். இரண்டு அந்தம் - வேதாந்தம், சித்தாந்தம் என்னும் இரண்டு அந்தங்கள். அபேதம் - வேறுபாடு இல்லாதவை.

(விளக்கம்) வேத ஆகமங்களும், வேதாந்த சித்தாந்தங் களும் இறைவனது மெய்ம்மொழிகளைக் கொண்டனவே. வேதம் எல்லாச் சமயத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுக் கருத்துக்களைக் கொண்டது. ஆனல் ஆகம்ம் அந்தந்தச் சமயத்தவர்கள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டிய விதிகளை எடுத்து மொழிவது. மந்திரம் ஒதுக என்று வேதம் கூறினால், சைவ ஆகமம், பஞ்சாட்சர மந்திரம் ஒதுக என்றும், வைணவ ஆகமம், அஷ்டாட்சர மந்திரம் ஒதுக என்றும் கூறும். ஆகவே வேதம், ஆகமம் முறையே பொது சிறப்பு எனப்பட்டன. வேதாந்தம் ஜீவான்மா பரமான்மா ஒன்று என்ற கருத்தில் நாமே பிரம்மம் என்று கூறும். ஆளுல் சித்தாந்தம், பதிவேறு, பசுவேறு என்று கூறும். இரண்டும் இவ்வாறு கருத்தில் வேறுபட்டாலும் இரண்டும் முத்தி இன்பமே கூறுதலின் பெரியோர்கட்கு அவை அபேதம் ஆயின.