பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

334

அப்படிப் பாசம் நிறைந்திருந்தால், இறைவன் தூரத்தேதான்

இருப்பான் என்பதும், பாசம் நீங்கிளுல் இறைவனே அணுக லாம் என்பதும் ஆகும்.

முத்திக்கும் பத்திக்கும் வழி 319. முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே சித்திக்கு வித்துச் சிவபரம்தான். ஆதல் சத்திக்கு வித்துத் தனது சாந்தமே. (இ - ள்) மோட்சத்தைப் பெறுவதற்குக் காரணமாக இருப்பது இறைவன் திருவடி ஞானத்தை அறிதலாகும். பக்திக்குக் காரணமாக இருப்பது அவனைப் பணிந்து அவனது திருவடிகளைச் சரணடைதலாகும். சித்தியைப் பெறுதற்குக் காரணமாவது, சிவபரம்பொருளை விட்டு நீங்கா திருத்தல் ஆகும். சக்தி பெறுதற்குக் காரணமாய், இருப்பது ஐம்பொறிகளே அடக்கி ஆளுதல் ஆகும்.

(அ - சொ) முத்தி - மோட்சம். முதல்வன் - இறைவன். ஞானம் - திருவடி ஞானம். பற்றல் - எண்ணுதல். உற்று - அடைந்து. சிவபரம்தானதல் - இறைவனை விட்டு நீங்காதிருத் தல். உபசாந்தம் - ஐம்புலன்களே அடக்கல். வித்து - காரணம். (விளக்கம்) ஞானம் ஈண்டுத் திருவடிகளை உணர்த்து கிறது. தனது-உபசாந்தமே என்று பிரிக்கவும்.

ஈசன் இருக்கும் இடம் 320. காசி துணியினின் நான்குமுத்விரலிடை ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் பேசி இருக்கும் பெருமறை அம்மறை கூசி இருக்கும் குணம்.அது ஆமே. (இ - ள்) மூக்கின் நுனியிலிருந்து வெளிப்படும் பன்னிரண்டு அங்குல உயிர்ப்பினில் இறைவன் இருப்பிட