பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

335

335

மாகக் கொண்டு விளங்குவன். இந் த உண்மையினை யாரும் உணரவில்லை. பெரிய வேதங்கள் இவ்வாறுதான் "பேசிக்கொண்டிருக்கும். ஆ ைல் அவைகள் வெளிப்படை யாகச் சொல்லுதற்கு நாணம் கொள்கின்றன. அவற்றின் இயல்பு அவ்வாறு இருக்கிறது.

(அ- சொ) நாசி மூக்கு. நான்குமூ - பன்னிரண்டு. விர லிடை - விரல் அளவு. மறை - வேதம். கூசி - வெட்கி.

(விளக்கம்) நமது மூக்குத் துவாரத்தின் வழியே வரும், உயிர்ப்பு நமது கை விரல்களை ஒன்றன்மேல் ஒன்ருகப் பன்னிரண்டு என எண்ணும் அளவுக்கு அடுக்கினல் எவ்வளவு நீளம் இருக்குமோ, அவ்வளவு நீளம் வெளியே செல்லும். அப்படிச் செல்லும் பிராணவாயுவின் கடைசியில் விளங்கு பவன் இறைவன். அவ்வாறு இருக்கிருன் என்பதை யாரும் அறியவில்லையே என்று இரக்கப்படுகிருர் ஆசிரியர். யாரும் அறியார் என்பது உலகமக்களைக் குறிக்கும். யோகியர் இதனை நன்கு அறிவர். இதன் கருத்துப் பிராணவாயுவை வீணே கழிக்காது உள்அடக்கி இறைவனைக் காண்க என்பதாம். தீட்டு இல்லாதவர்கள் 321. ஆகுசம் இல்லை அருகிய மத்தருக்கு

ஆகுசம் இல்லை அானஅர்ச் சிப்பவர்க்கு ஆகுசம் இல்லையாம் அங்கி வளர்ப்பவர்க்கு ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே. (இ - ள்) அரிய மெய்ம்மையினை அறிந்தவர்கட்குத் தீண்டாமை என்பது இல்லை; இறைவனை வழிபடுபவர் கட்கும் தீண்டாமை இல்லை; யாகாதி காரியம் செய்பவர் கட்கும் தீட்டு இல்லை; அரிய வேதங்களை உ ண ர் ந் த ஞானிகட்கும் தீட்டுக் கிடையாது. . . . . . . (அ - சொ) ஆகுசம் - தீட்டு. நியமத்தார்- ஒழுக்கம் மேற் கொண்டவர்கள். அரன். இறைவன். அர்ச்சிப்பவர் வழி படுவோர். அங்கி வளர்ப்பவர்-பாகாதி காரியம் செய்பவர்கள்.