பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

336

(விளக்கம்) தீட்டுத் தீட்டு என்று விலக்குதல் கூடாது என்பதை விளக்கவே இந்த மந்திரம் எழுந்தது. மக்கட்கு நன்மை செய்வதற்கே நியமத்தவர்களும் இறைவனைப் பூசிப்பு வர்களும், யாகாதி காரியங்களைச் செய்பவர்களும், ஞானிகளும் இருத்தலின், அவர்கள் தீண்டாமையினை மேற்கொண்டால், மக்கள் எங்ங்ணம் ஈடேற முடியும்?

ஞானிகளின் செயல்

322. தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னே வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள் பின்ன வினையைப் பிடித்துப் பிசைவார்கள் சென்னியில் வைத்த சிவன்அரு ளாலே. (இ - ள்) தன்னை உணர்ந்த மெய்ஞ்ஞானிகள் முன் வினையாகிய சஞ்சித வினையினை விட்டொழிப்பார்கள். இனி வரக்கடவதாகிய ஆகாமிய வினைகளை வரஒட்டாமல் நசுக்கி விடுவார்கள். இவ்வளவுக்கும் காரணம், இறைவனது திருவடிகளே வந்தித்து வாழ்த்தித் தம் தலையில் சூட்டிக் கொண்டதுதான்.

(அ- சொ) தத்துவம் - உண்மை. முன்னைவினை . முற் பிறப்பு வினை. முடிச்சு - முற்பிறவியில் தேடிய புண்ணிய, பாவமாகிய மூட்டையின் முடிச்சு. -

(விளக்கம்) தத்துவ ஞானிகள் இறைவனே இடையருது பூசித்து, அவனுடைய திருவடிகளைத் தம்சென்னியில் குடியுள்ள காரணத்தால், முற்பிறப்பில் செய்தவினைகளை விலக்குவதோடு எடுத்த பிறவியில் வந்துசேரும் வினைகளையும் போக்குவர்.

அறிவை அறிவதுவே பொருள் 323. எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு

எல்லாம் அறிந்தும் இலாபம்அங்கில்லை எல்லாம் அறிந்த அறிவினை நான்என்னில் எல்லாம் அறிந்த இறைஎனல் ஆகுமே.