பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

32

"அற்புதக்கூத் தாடுகின்ற அம்பலம்சூழ் திருவீதிப்

பொற்பதியாம் பெரும்பற்றப் புலியூரில் வந்தணைந்தார்’ என்றும்,

எவ்வுலகும் உய்யஎடுத் தருளியசே வடியாரைச் செவ்வியஅன் புறவணங்கிச் சிங்தைகளி வரத்திளைத்து வவ்வியமெய் உணர்வின்கண் வரும்ஆனந் தக்கூத்தை அவ்வியல்பில் கும்பிட்டங் காராமை அமர்ந்திருந்தார். என்றும் அறிவித்திருப்பதை அறியலாம்.

சிதம்ப்ரத்தினின்று புறப்பட்ட திருமூலர், திருவாவடு துறையை அடைந்தார் என்றனர் தொண்டர் சீர்பரவுவார்.

காவிரிநீர்ப் பெருந்தீர்த்தம் கலந்தாடிக் கடந்தேறி ஆவின் அரும் கன்றுறையும் ஆவடுதண் துறைஅணைந்து சேவில்வரும் பசுபதியார் செழுங்கோயில் வலம்வந்து மேவுபெருங் காதலினுல் பணிந்தங்கு விருப்புறுவார் என்றனர். இக்கருத்துக்கு அரணுகத் திருமூலரும் சிவன் ஆவடு தண் துறை சீருடையான் பதம் சேர்ந்திருந்தேனே' என்றும், சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தண்துறை" என்றும் கூறுதல் 玄fr@リ。 -

திருமூலர் மூலன் என்னும் பெயரிய இடையனது உடலில் புகுந்தனர் என்பதை,நம்பி ஆண்டார் நம்பிகளும்,சேக்கிழாரும் கூறுகின்றனர். திருமூலரும், நந்தி அருளாலே மூலனை நாடினேன்' என்றும், "நந்தி அருளாலே மூலனே நாடிப்பின், நந்தி அருளாலே சிவன் ஆயினேன்' என்றும் கூறுகின்ருர். 'மூலனை நாடினேன்’’ என்னும் தொடருக்கு, மூலப் பொருளாகிய இறைவனைத் தேடினேன் என்று பொருள். கொள்ள இருந்தாலும், வரலாற்றிற்கும் அத் தொடர் பொருத்தமாக இருத்தலின், மூலன் உடலில் புகுந்தமையினையே ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். என்ருலும், ஏன் புகுந்தார் என்பதற்குத் திருமூலர் வாக்கில் சான்றில்லை. ஆளுல், அங்ங்ணம்