பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

339

339

சுவையாகவும், மலரில் மணமாகவும் இறைவன் உளன். இவ்வாறு ஆன்மாக்களைக் காக்கும் இ ைற வ ன் எல்லாப் பொருள்களிடத்தும், எ ல் லா இடங்களிலும் கலந்து விளங்குகின்ருன்.

(அ - சொ) கால் - காற்று. ஊறு - உணர்ச்சி. கட்டி . வெல்லம். இரதம் - சுவை. நாற்றம் - வாசனை.

(விளக்கம்) இறைவன் பொருள்கள் எல்லாவற்றிலும் கலந்து மக்கட்கு இன்பம் தரும் இயல்பினய்ை உள்ளான் என்பது கருத்து.

குருவை என்றும் உள்ளத்தில் கொண்டால் மும்மலம் நீங்கும் 327. கருடன் உருவம் கருதும் அளவில்

பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல் குருவின் உருவம் குறித்தஅப் பொழுதே திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே. (இ- ள்) கருடன் வடிவை எண்ணிய மாத்திரத்தில், தலைக்கேறிய பெருவிடமானலும் இறங்கும் அச்சம்

•நீங்கிவிடும். அதுபோல, ஆசாரியனது வடிவைத் தியானம் செய்தபோது மும்மலங்களும் ஒழியும்; தானே பிரம்மமும் ஆகலாம். - *

(அ - சொ)'திரிமலம் - மூன்று அழுக்குகள். (விளக்கம்) பாம்புக்கும் கருடனுக்கும் எப்போதும் பகை, பாம்பு கீழே ஊர்ந்து செல்லும்போது, மேலே கருடன் பறந்து போகையில், அதன் நிழல் பாம்பின்மீது பட்ட அளவிலும் இறந்துவிடும். ஆகவே, பா ம் பால் கடியுண்டவர்களை மாந்திரீகன் கருடபாவனை மந்திரத்தை உச்சரித்துக் கருட பாவனையுடன் பார்த்தால், கடியுண்டவர்களின் உடம்பில் ஏறிய விடம் நீங்கி அச்சமும் ஒழியும். திரிமலங்களாவன, ஆன்மாவைப் பற்றி இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை என்பன. இந்த விடங்கள் குருவாகிய கருடனைத் தியானம்