பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

341

341

களை யுடையது: ரூபம் என்னும் சொல்லைச் சிவளுேடும், பரசிவ என்னும் சொல்லோடும் இணைக்கவும்.

நமச்சிவாயக் கணி 329. ஒன்றுகண் டேன்.இவ் உலகுக் கொருகனி

நன்றுகண் டாய்அது நமச்சிவா யக்கனி மென்றுகண் டால்அது மெத்தென் றிருக்கும் தின்றுகண் டால் அது தித்திக்கும் தான்அன்றே. (இ - ள்) இவ்வுலகுக் கெல்லாம் ஒப்பற்ற பழமாகிய ஒன்றைக்கண்டு கொண்டனன். அக்கணிதான் நமச்சிவாயக் கணி. அது மிக நல்ல கனி. அதனை மென்று சுவைத் தால், அது மெத்தென்று இரு க் கு ம். அதனைத் தின்று பார்த்தால் அஃது இனிக்கும்.

(அ - சொ) ஒன்று ஒப்பற்ற ஒன்றை. (விளக்கம்) கனியை மெல்லுதல் இயல்பு. ஆளுல் இங்குக் குறிப்பிடப்பட்ட கனி நமச்சிவாய என்னும் மந்திரமாகிய கணி. இதனை மெல்லுதலாவது உணர்வில் தியானித்தல். தின்று காணுதலாவது சதா எண்ணுதல்.

சிவசிவ என்னச் சிவகதி கிடைக்கும் 330. சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்னச் சிவகதி தானே. (இ - ள்) கொடிய பாவத்தையுடையவர்கள் சிவசிவ என்று கூருமல் இருக்கின்றனரே! சிவசிவ என்று கூறினல், கொடிய பாவங்கள் ஒழியுமே. சிவசிவ என்று கூறி வந்தால் தேவர்களாக ஆகலாமே. சிவசிவ என்று கூறச் சிவகதியை யும் அடையலாம். -

(அ - சொ) தீவினை - கொடிய பாவம், சிவகதி சிவலோக இன்பம்.