பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

33

புகுந்ததற்குக் காரணம் நந்தி அருள் என்பது மட்டும் அவரால் கூறப்பட்டுள்ளது. மூலன் உடலில் புகுந்த பின்னரே திருமூலர் ஆயினர் என்பதை, தம்முயிரைப் பாய்த்தினர்; பாய்த்தியபின் திருமூல ராயெழலும் என்னும் சேக்கிழார் வாக்கால் அறி கிருேம். சுந்தரர் இவரைத் திருமூலர் என்கிருர், நம்பியாண் டாரும் மூலன் என்கிரு.ர். தமிழ் மூவாயிரத்தின் சிறப்புப் பாயிரச் செய்யுள் வழியும், இவரது பெயர் மூலர் என்ருபது என்பதை, "மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்" என்ற அடியில் காணலாம். என்ருலும், மாடுகளின் துயரம் நீங்க இச் செயலினைச் செய்தார் என்று திருமூலர் வாக்கால் அறிதற்கு இல்லை. > ベ

திருமூலர் தம்முடம்பைத் தக்க இடத்தில் இட்டு, அதன் பின்னர்த் தம் முயிரை மூலன் உடலில் புகுத்தினர் என்பதைச் சேக்கிழார் வாக்காகிய,

'தவமுனிவர் தம்உடம்புக் கரண்செய்து தாம்முயன்ற

பவனவழி அவன்உடலில் தம்முயிரைப் பாய்த்தினர்' என்று பாடிய அடிகளால் அறிகிருேம். பின்னர்த்தம்முடம்பைத் தேடியபோது, அஃது இருந்த இடத்தில் இராமையை அறிந் தார் என்பதைச் சேக்கிழார், "வைத்த எப்பினுள் உய்த்து முந்தை உடல் பொறை காணுர்’ என்று செப்புகின்ருர், இவ்வாறு தம் உடல் காணக் கிடத்திலது என்பதைத் திருமூலர், "புகலிடத்து எம் மெய்யைப் போகவிட்டானே" என்று கூறுதல் காண்க,

திருமூலர் திருவாக்கால் அவர் திருவாவடுதுறையை அடைந்ததைக் கண்டோம். அங்ங்ணம் அடைந்தவர், அரசமரத் தடியில் சிவயோக நிலையில் இருந்தனர் என்பதைச் சேக்கிழார்,

- ஆவடுதண் துறை அணந்தங் கரும்பொருளே உறவணங்கி

மேவுவார் புறக்குடவால் மிக்குயர்ந்த அரசின்கீழ்த் தேவிருக்கை அமர்ந்தருளிச் சிவயோகம் தலைநின்று பூவலரும் இதயத்துப் பொருளோடும் புணர்ந்திருந்தாா. என்று கூறுகிரு.ர்.

3س-دتر