பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

348

(இ) - ள்) குருநாதனும் நந்தியம் பெருமானை ஞான உணர்ச்சியினல் பலமாக நிலைத்திருக்க அன்பினால் உள்ளத் தில் பதிய வைத்திருப்பவர்க்கு மலவாதனை கிடையாது. எந்தவிதமான குற்றமும் ஏற்படாது. மானம், அபிமானம், குலம் முதலானவை இல்லை. நலமும் இல்லை.

(அ - சொ) பலம் - வன்மையோடு. மாசு - குற்றம். அபிமானம் - ஆசை.

(விளக்கம்) இறைவனை உள்ளத்துள் கொள்ளும் ஞானி இறைவன் ஆகின்றன். இதல்ை இறைவனுக்கு உள்ள குணங் கள் ஞானியிடம் பதிகின்றது. ஆகவே, மலம் மாசு முதலியன இல்லாமல் போகின்றன. மலம், ஆணவம், கன்மம், மாயை என்பன. மாசு, உடல் அழுக்கு, ஞானிக்கு சாதி வேறுபாடு இன்மையின் குலம் இல்லை எனப்பட்டது. சாத்வீக குணமே இருந்தபின் ராஜச தாமச குணங்களுக்கு வழி இல்லை. நிழல் ஒன்று இருந்தால்தான் வெயிலின் கொடுமை தெரியவரும். அதுபோலத் தீமை என்பது ஒன்று இருந்தால்தானே நன்மை என ஒன்று இருக்கும்; ஞானிக்கு இரண்டும் இன்மையின் நலம் இல்லை என்றனர்.

இறைவன் திருவடி மாண்பு 340. விரும்பில் அவன்அடி வீர சுவர்க்கம் -

பொருந்தில் அவன்அடி புண்ணிய லோகம் திருந்தில் அவன்அடி தீர்த்தமும் ஆகும் வருக்தி அவன்அடி வாழ்த்தவல் லார்க்கே. (இ - ள்) பல தொல்லைகளில் உழன்று வருந்திப் பின் உணர்ச்சி வரப்பெற்று இறைவனது திருவடிகளை வாழ்த்த வல்லவர்கள், இறைவனது திருவடிகளை விரும்பினல் அவ் விருப்பம் வீர சுவர்க்கத்தை அடைவிக்கும். அவனது திரு வடிகளில் உள்ளத்தைப் பொருந்த வைத்தால் அப் பொருத்தம் புண்ணிய உலகில் சேர்ப்பிக்கும். அவனது