பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

349

§

349

திருவடிகளில் மனம் பொருந்த வேண்டும் என்ற எண்ணம் ஏனைய எண்ணங்களை விடுத்துத் திருந்தில்ை புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கிய பலனை அளிக்கும். (அ- சொ) சுவர்க்கம் - மோட்சம். (விளக்கம்) இம்மந்திரம் இறைவனது திருவடி மாண்பை உணர்த்துகிறது.

தாய் வயிற்றில் கரு வளரும் முறை 34. நீங்கிட நீங்கிட நிமிர்ந்து வளர்ந்தோங்கும் ஓங்கிட ஓங்கிட உறுதியாம் வாயுவு வாங்கிட வாங்கிட வன்னி தலைக்கொளும் பாங்கிடப் பாங்கிடப் பத்தாகும் திங்களே. (இ - ள்) தாய்க் கருவில் உள்ள பிண்டம் உடல் உறுப் புக்கள் உண்டாக நிமிர்ந்து வளர்ந்து விருத்தியாகும். விருத்தி ஆக ஆக, உறுதியான பிராண வாயுவும் விருத்தி அடையும். பின் வெம்மை தலைக்கு ஏறும். எல்லா உறுப் புக்களும் பக்குவம் அடையப் பத்து மாதம் ஆகும்.

(அ - சொ) வன்னி - தீ. பாங்கிட- பக்குவம் அடைய. திங்கள் - மாதங்கள்.

(விளக்கம், இம் மந்திரம் தாய்க் கருவில் பிண்டம் வளரும் முறை கூறுகிறது. இந்த மந்திரத்தின் விளக்கத்தை யூகி முனிவர் வைத்திய சிந்தாமணி வாயிலாகத்தான் புரிந்து கொள்ள முடியும். அச் சிந்தாமணியில் இரண்டாம் மாதம் தலை, முதுகும்; மூன்ரும் மாதத்தில் அரை, விரல், கை, கால் களும்; நான்காம் மாதத்தில், பாதம், மூக்கும்; ஐந்தாம் மாதத் தில் காது, நாக்கு, கண்களும்; ஆருவது மாதத்தில் நகங்களும்: ஏழாவது மாதத்தில் தாய் உண்ட சாரம் தலையின்மூலம் செல்லுதலும், பேச்சு உண்டாதலும்; ஒன்பதாவது மாதத்தில் அறிவு தோன்றி இறைவனை நினைந்து கும்பிட்டு அருள் தர என்று தியாணித்துப் பத்தாவது மாதத்தில் குரு பார்வை ஏற்பட்டுக் கீழ்நோக்கிக் குழந்தை பூமியில் வந்து பிறக்கும்,