பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

352

(இ ஸ்) வாதத்தின் அழகிய நடையானது மயில் நடை போலும், கோழி நடைபோலும் இருக்கும். பித்தத் தின் நடை அட்டையின் நடைபோலும், தவளை நட்ை போலும் இருக்கும். கபத்தின் நடை விரைவாக ஊர்ந்து செல்லும் பாம்பின் நடைபோல இருக்கும். இந்த துட்பத்தை விஷம் உண்டு இருண்ட கண்டத்தையுடைய நீலகண்ட மூர்த்தியை அறிந்தவர்களாம் சித்தர்களே உணரவல்லவர் ஆவர். -

(அ சொ) இல்லை - மயில், எழில் - அழகு. எல்லை - அட்டை ஒல்லை - வேகம். அல் - இருள்.

(விளக்கம்) அல் என்பதன் பொருள் இருள். ஈண்டு இருள் என்பது இருண்ட விஷத்தை உணர்த்தி நிற்கிறது. அல்லையே கண்டறிந்தவர் என்றதனால், அல் போலும் நிறமுடைய விஷத்தைக் கண்டத்தில் அடக்கிய இறைவனை உணர்த்து கிறது. இம் மந்திரம் நாடிகளின் நடைகளைக் கொண்டு உணர லாம் என்பதை விளக்குகிறது. நடை என்பது ஈண்டு நாடி களின் துடிப்பு.

வாத நோயால் வரும் துன்பங்கள்

345. அறிய இம் மூன்றின தாண்மை சொன்னர் என் கந்தி

எரிஅனல் வாதம் எரிக்கும் குணம்கேளு குறிஎனக் கைகால் குளைச்சு விலாச்சந்து பறிான கொந்துடல் பச்சைப்புண் ஆகுமே. (இ - ள்) எனது குருநாதனம் நந்தியம் பெருமான் வாதபித்த சிலேத்துமம் செய்யும் ஆண்மையினை எனக்கு எடுத்துச் சொல்லியுள்ளார். அவற்றுள் வாதம் தனது கோபத்தால் செய்யும் செயல்களைக் கேட்பாயாக. அஃது உடம்பில் எரிச்சலை உண்டாக்கும். கை கால், விலாச் சந்து, இடுப்புச் சந்து முதலியவற்றில் அதிக வலியை உண்டு பண்ணும்.